Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஸ்... இனி நீங்க நல்ல காற்றையும் காசு கொடுத்துதான் வாங்கணும்!

தை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள்... உங்கள் பால்ய காலத்தில்,  தெருக்களில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும்போது நிகழ்ந்த சம்பவத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

வேர்க்க விறுவிறுக்க நீங்கள் விளையாடி களைத்து போயிருக்கும் போது, உங்கள் தெருவில் யார் வீட்டு கதவையாவது தட்டி தண்ணீர் கேட்டு இருப்பீர்கள். அவர்களும் இன்முகத்துடன் கொடுத்து இருப்பார்கள். அப்போது நிச்சயம் யாருக்கும் தோன்றி இருக்காது, தண்ணீரை ஒரு நாள் காசு கொடுத்து வாங்கும் நிலை வரும் என்று. அப்போது யாராவது, 'தண்ணீர் ஒரு நாள் விலைமதிப்பற்ற பண்டமாக மாறும்' என்று சொல்லி இருந்தார்கள் என்றால்,  இந்த சமூகம் அவரை பைத்தியமாகதான் பார்த்து இருக்கும். ஆனால் ஒரு தசாப்தத்தில் அது நடந்தது. தண்ணீர் தனி மனிதன்  உரிமை என்ற நிலையிலிருந்து நிறுவனங்களின் விற்பனை பண்டமாக மாறியது. இதுதான் நாளை காற்றுக்கும் நடக்கப் போகிறது. ஆம். காற்று சந்தை பொருளாக மாறத் துவங்கி இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சிலர் திருட்டுத் தனமாக அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை தடுப்பதற்காக, மத்தியபிரதேச டிகாம்கர் நகராட்சி,  துப்பாக்கி ஏந்திய ஆட்களை காவலுக்கு அமர்த்தி உள்ளது. ஆனால், காற்றை வேலிகள் வைத்து அடைத்து வைத்துவிட முடியாது என்ற அளவில் நாம் சந்தோஷம் கொள்ளலாம்.


காற்றை இறக்குமதி செய்ய துவங்கி உள்ளோம்:

ஏற்கெனவே, உலகில் மாசடைந்த காற்று உள்ள நகரங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. அந்த நகர காற்று,  சுவாசிக்க தகுதியற்றதாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. எப்போதும் அனைத்து மோசமான சூழ்நிலைகளிலும் தனக்கான சந்தையை சரியாக யோசிக்கும் நிறுவனங்கள், இந்த இக்கட்டையும் தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிட்டு, காற்றை சந்தை பொருளாக கடை விரித்துள்ளது.

இது நாள் வரை வாகனங்களை, மின்னணு பொருட்களை இறக்குமதி செய்து வந்த நாம், இனி காற்றையும் இறக்குமதி செய்வோம். ஆம், கனடாவை சேர்ந்த ‘விட்டாலிட்டி ஏர்’ என்ற நிறுவனம்,  கனடா காடுகளில் உள்ள தூய்மையான காற்றை,  ஒரு டப்பாவில் அடைத்து வைத்து ரூ 1450 முதல் 2800 வரையிலான விலையில் விற்க துவங்கி உள்ளது. 

எதை விற்று எதை வாங்க போகிறோம்...?

இந்த நிறுவனத்திற்கு இது புதிதல்ல. ஏற்கனவே உலகின் மாசடைந்த இன்னொரு நகரமான பீய்ஜிங்கில், கடந்த ஓர் ஆண்டாக  இந்த நிறுவனம் காற்றை விற்பனை செய்து வருகிறது.

குளிர்பானத்தை பல்வேறு சுவைகளில் விற்பது போல், காற்றையும் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் என்னும் இரண்டு நறுமணத்தில் ஏற்றுமதி செய்கிறது அந்த நிறுவனம்.

இது குறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனர் மோசஸ், “சீனாவிலிருந்து எங்களுக்கு ஆர்டர் குவிகிறது. குறிப்பாக பீய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய மாகாணங்களிலிருந்து. நாங்கள்  இதுவரை 12000 பாட்டில்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்., இன்னும் ஆர்டர்கள் வந்த வண்ணமாகவே இருக்கிறது” என்கிறார்.

அதாவது மின்னணு உற்பத்தி துறையில் நாங்கள் தான் ஆசியாவின் தாதா என்று பிதற்றிக் கொள்ளும் சீனா,  தினமும் டன் டன் ஆக மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீனா,  காற்றை அதே அளவில் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது. நாளை இந்தியாவின் நிலையும் இதுதான்.

சீனாவை விட இந்தியா சிறந்த சந்தை:

இதை நான் சொல்லவில்லை. அந்த நிறுவனத்தின் அதிகாரிகளே சொல்கிறார்கள். அந்த நிறுவனத்தின் அதிகாரி, “சீனாவை விட வேகமாக இந்தியாவில் காற்று மாசடைந்து வருகிறது. அதனால் எங்கள் காற்றை விற்க சரியான சந்தை இந்தியாதான்.” என்கிறார்.

ஆம், அவர்கள் மிகச் சரியாகவே கணித்து உள்ளார்கள். வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தையும் மிக வேகமாக சுரண்டி வருகிறோம். நாளை நம் பிள்ளைகள் தண்ணீர் பாட்டிலுடன், காற்று பாட்டிலையும் தூக்கிச் செல்வார்கள். பாட்டில் தண்ணீரை வாங்க சொல்லி நமக்கு பரிந்துரைத்த நடிகர், நடிகைகள், நாளை இந்த பாட்டில் காற்றையும் வாங்கச் சொல்லி பரிந்துரைக்கலாம்.
 

ஆனால், இது நிச்சயம் நன்மைக்கான பாதை அல்ல.

- மு. நியாஸ் அகமது
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close