Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதைச் செய்வீர்களா வைகோ..?

ண்மையில் வைகோ பேசி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தீர்களா... ? பார்க்கவில்லை என்றால் தயவுசெய்து சில நிமிடங்கள் செலவழித்துப் பார்த்துவிடுங்கள். பின்னர் கட்டுரைக்கு வருவோம்..!

 

வழக்கமான வைகோவின் நீட்டி முழக்கும் பேச்சு அல்ல இது. இந்த சிறிய வீடியோவில் தன் தோல்விகளை, தன் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், அவர் அறிந்தோ, அறியாமலோ அவர் சொல்லிய ஒரு வாக்கியம்  பல கேள்விகளை எழுப்புகிறது.

வீடியோவில் அவர் பேசி உள்ளது, “இது போல ஒரு கூட்டணி அமையப் போவதில்லை. தி.மு.க., அ.தி.மு.கவை எதிர்த்து, வாதத்திற்கு இது வெற்றி பெறவில்லை என்று சொன்னால்... இனி எந்தக் கட்சியும் இந்த முயற்சியில் ஈடுபடாமல் தி.மு.க. கொடுக்கிற சீட்டை, அ.தி.மு.க. கொடுக்கிற சீட்டை வாங்கிட்டுப் போயிடுவாங்க. என் போன்றவன் தேர்தலில் போட்டியிடாமல் போயிடுவான்... பெரியார் மாதிரி கட்சி நடத்துவான்....” என்கிறார். அதாவது, ’இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வெற்றி பெற வையுங்கள், இந்த அணி தோல்வியுற்றால் தமிழகத்தில் மாற்று அணி முயற்சிகள்  கருவிலேயே சிதைந்துவிடும்’ என்பது அவர் வாதம். இந்தக் கோரிக்கைகளை,  குறிப்பாக அவர் முன் வைப்பது புதிய தலைமுறை வாக்காளர்களிடம். அவர் கோரிக்கையில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், இயல்பாக சில கேள்விகள் எழுகிறது.

தோல்வியுற்றால் கலைந்து விடுவீர்களா...?

மக்கள் நலக் கூட்டணி தேர்தல் கூட்டணியாக மாறியது கடந்த ஆண்டு நவம்பர் 2 ம் தேதிதான். அதாவது சரியாக தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு. அதற்கு முன்பு சில காலம் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும், அதை தேர்தல் கூட்டணியாக அறிவித்தது நவம்பர் மாதம்தான். அப்போது, அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம். என நான்கு கட்சிகள் மட்டுமே இருந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்புதான் தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் ம.ந.கூவில் இணைகிறார்கள். வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இந்தக் கூட்டணியின் காய் நகர்த்தல்கள் முழுவதும், இந்தத் தேர்தலை கணக்கில் கொண்டே இருந்தது. ஆக,  தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன் உருவாகிய இந்தக் கூட்டணியை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வைகோ எதிர்பார்க்கிறார். எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் தோல்வியுற்றால் கலைந்து விடுவோம் என்று மறைமுகமாகக் கூறுகிறார். உண்மையில் வைகோவின் இந்த தர்க்கம் இளைய தலைமுறை வாக்காளர்களின் அரசியல் கனவுகள் மீது அமிலம் வீசுவதாக உள்ளது.

ஆம். வைகோவிற்கே  தெரியும் மக்கள் நலக் கூட்டணி இயல்பானது அல்ல. பொது எதிரிகளை வீழ்த்த அமைந்த கூட்டணி என்று. அ.தி.மு.கவும், தி.மு.கவும் எப்படி மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதிரியானது? பொது எதிரிகள் என்றால் காரணங்களும் பொதுவானதா...? இல்லை என்பது மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்களின் மனசாட்சிக்கு நன்கு தெரியும். அதுவும் த.மா.கா., மக்கள் நலக் கூட்டணியில் இணைவதற்கு  முதல் நாள் இரவு வரை, அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி வந்தது என்பது, அரசியல் பார்வையாளனாக மட்டும் இருக்கும் சாமான்யான நம்மைவிட பல தேர்தல்களைச் சந்தித்த வைகோவிற்கு நன்கு தெரியும். ஆக இது இயற்கையாக அமைந்த கூட்டணி அல்ல. ஆனால், இதை அந்தக்  கூட்டணியின் குறையாக நாம் முற்றும் முழுவதுமாகப் புறக்கணித்துவிடவும் முடியாது. 

மாற்று கூட்டணி, கூட்டாட்சி போன்ற விஷயங்கள்  வாக்கு வங்கி அரசியலைத் தாண்டி நிச்சயம் வரவேற்பிற்குரியது, மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது. குறிப்பாக, மக்கள் நலக் கூட்டணி முன் வைத்திருக்கிற தேர்தல் அறிக்கை பாராட்டுக்குரியது. தமிழ் சமூகத்தின் பல பிரச்னைகள் தெளிவாக அலசப்பட்டு இருக்கிறது. ஆனால், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அமைந்த ஒரு கூட்டணியை, அதுவும் வேறு கட்சிகளில் இடமில்லை என்பதால்  இந்தக் கூட்டணிக்கு வந்த கட்சிகளை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும், வெற்றி பெற வைக்க வேண்டும், இல்லையென்றால் கலைந்துவிடுவோம். அடுத்த தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. அளிக்கும் தொகுதிகளை பெற்று கொள்வோம் என்பது ஒரு வாதத்திற்கு கூட சரியில்லை.  தேர்தல் வெற்றி மட்டும்தான் உங்கள் இலக்கு என்றால், நீங்கள் எப்படி மாற்றாக இருக்க முடியும்...?

நம்பிக்கையை நீங்களே கருக்கி விடாதீர்கள்:

உண்மையில் தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கிறது.  மக்கள் மாற்றி மாற்றி தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் வாக்களிக்கக் காரணம், அந்தக் கட்சிகளின் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல,  நம்பிக்கையளிக்கும் வேறு கட்சிகள் அல்ல என்பது மட்டுமே காரணம். இது இங்கு அனைவருக்குமே புரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக இந்தக் கட்சிகள் மீது இளைஞர்கள் கடும் விரக்தியில், அதிருப்தியில் இருக்கிறார்கள். மாற்றம் வராதா என்று ஏங்குகிறார்கள்... மாற்றத்தில் பங்கெடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.  ஆனால், ஆறு மாதத்தில் அரும்பிய நீங்கள் எப்படி மாற்றாக இருக்க முடியும்...? உங்களை மக்கள் ஏன் நம்ப வேண்டும் என்று 10 காரணங்களை அடுக்குங்கள் பார்ப்போம். உங்களை ஆதரிப்போர் இபோது வைக்கும் வாதம், “ம.தி.மு.க., வி.சி.க., தே.மு.தி.க., த.மா.கா., சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகள் மீது ஊழல் கறை இல்லை” என்பதாக இருக்கிறது. செல்வி ஜெயலலிதா முதல்வர் பொறுப்புக்கு வரும் வரை, அவர் மீதும் ஊழல் கறை இல்லைதானே. இது எப்படி உங்களுக்கு வாக்களிப்பதற்கான ஒரு வாதமாக எடுத்துக்கொள்ளமுடியும்...?

இந்தத் தேர்தலில் நாங்கள் தோற்றோமானால், சில தொகுதிகளுக்காக தி.மு.க., அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை வரும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதாவது உங்களை அறியாமல் நீங்களே நம்புகிறீர்கள், இந்த கட்சிகள்தான் வலுவான கட்சிகள் என்று. உண்மை அதுவல்ல. உண்மையில் இந்த கட்சிகளை எதிர்த்து வலுவாக எந்தக் கட்சியும் செயல்படவில்லை என்பதுதான் உண்மை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் அவர்களின் மக்கள் விரோத போக்குகளை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், தேர்தல் வந்தவுடன் எப்போதும் அவர்கள் உடன் கரம் கோர்ப்பவர்களாகவே இது நாள் வரை இருந்திருக்கிறார்கள். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். பின்பு எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்...?

இத்தனை காலம் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டு, ஒரு தேர்தலிலேயே எல்லாம் மாறிவிட வேண்டும் என்று நினைப்பது முரண் மட்டுமா..? அபத்தமும்தானே! 

எதிரிகளிடமிருந்து பயிலுங்கள்:

நம் எதிரியை விட, நமக்கு  நல்ல பாடங்களை எப்போதும் நம் நண்பனால் கூட சொல்லிக் கொடுத்துவிட முடியாது. அதனால் உங்கள் அரசியல் களத்தில் எதிரியாக இருக்கும் பாரதிய ஜனதாவிடமிருந்து அரசியல் பாடத்தைப் படியுங்கள். ஒற்றை இலக்கத்தில் ஜனசங்கமாக பாரளுமன்றத்தில் நுழைந்த கட்சிதான், இன்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் எப்போதும், படு தோல்வி அடைந்தபோது கூட மனம் தளரவில்லை. அவர்கள் கொள்கையில் அவர்கள் உறுதியாக இருந்து வேலை பார்த்தார்கள். இதுதான் இப்போது மக்கள் நலக் கூட்டணி கற்க வேண்டிய பாடம். ஆம். கூட்டணி அமைத்து ஆறு மாதத்தில் நடக்கும் இந்த தேர்தலை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டிய தேவையே இல்லை.

இந்தக் கூட்டணியை அதே சூட்டில் வையுங்கள். உள்ளபடியே மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்தீர்களென்றால், தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து மக்கள் நல சேவைகளை எடுத்துச் செய்யுங்கள். அவர்கள் நம்பிக்கையை வென்றெடுங்கள். இதைச் செய்யாமல், ’இந்தக் கூட்டணி தோற்றால், மீண்டும் அ.தி.மு.க., தி.மு.க.-வுடன் கூட்டணி வைக்க நேரிடும் என்று நீங்கள் சொல்வது, உண்மையில் இளைஞர்களின் அரசியல் விருப்பங்களைச் சிதைப்பதாக, திராவிடக் கட்சிகளை அசைக்கவே முடியாது’ என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதாகவே அமையும்.

சீனா தத்துவஞானி சன் ட்சூ, “எதிரிக்கு மிக தொலைவில் நீங்கள் இருந்தாலும், அவனுக்கு அருகில் இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துங்கள்” என்றார்.  அதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. அவநம்பிக்கையை ஏற்படுத்துவதல்ல! 

- மு. நியாஸ் அகமது 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ