Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணி நீட்டிப்பில் சாதனை... சென்னை போலீஸ் ஐ.ஜி-யின் வெற்றிக்கதை!

ணி நீட்டிப்பைப் பொறுத்தவரையில் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஒரே மாதிரியான ஒரு வரியிலான பார்முலாவைத்தான் கடைபிடிக்கின்றன என்றே சொல்லலாம். அதாவது 'ஆள்வோரின் குட்-புக்'கில் அவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பணி நீட்டிப்பு என்பது போக, உயர் பணியில் இருக்கும் ஒரு அதிகாரியை டம்மியாக்கி அவருக்கு கீழுள்ள இன்னொருவருக்கு ஃபவரைக் கொடுத்து, கீழே கிடந்தவரை உச்சியில் ஏற்றி வைப்பது இரண்டு கழக ஆட்சியிலும் நடந்த கதை, இன்றும் நடக்கும் கதை.

லேட்டஸ்ட்டாக, அப்படி அனைவரின் புருவத்தையும் 'அட' என்று உயர்த்த வைத்திருக்கிறார், ஆள்வோரின் குட் புக் அதிகாரியான குணசீலன். போலீஸ் வட்டாரத்தில் ஏ.எம்.எஸ். என்றும், வி.அன்ட்.சி.குணசீலன் (விஜிலென்ஸ் அன்ட் ஆன்ட்டி கரெப்ஷன்) என்றும் இவருக்கு நிக் நேம் உண்டு.

1985-ம் ஆண்டுக்கான குரூப் ஒன் தேர்வின் மூலம் தமிழக காவல் துறையில் நேரடி டி.எஸ்.பி.யாக பொறுப்புக்கு வந்தவர் குணசீலன். சென்னை கீழ்ப்பாக்கம் காவல் சரகத்தின் முதல் போலீஸ் உதவி கமிஷனர் குணசீலன்தான். 1991-ல் இவருக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைத்தது.

தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் போலீஸ் எஸ்.பி.யாக பணி. பின், சமர்த்துப் பிள்ளைகளின் கைகளில் மட்டுமே பார்த்துப் பார்த்து ஒப்படைக்கப்படும், இரண்டு பிரிவுகளில் ஒன்றான கியூ பிரிவு  (இன்னொன்று உளவு) எஸ்.பி.யாக குணசீலனுக்கு போஸ்டிங்  கொடுக்கப்பட்டது.

சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர், சென்னை தெற்கு இணை கமிஷனர் மற்றும் தஞ்சாவூர், ஆயுதப்படை, சி.பி.ஐ.டி ஆகிய இடங்களில் டி.ஐ.ஜி.யாக இருந்தவர் குணசீலன்.

2006 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் சிறந்த காவல் பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கமும், சிறந்த பொதுச் சேவைக்கான 2009-ன் முதல்வர் பதக்கமும் பெற்றவர்.

2013, மே 31-ல் ஓய்வு பெறும் வரை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ்  ஐ.ஜி.யாக இருந்த குணசீலன், அதே லஞ்ச ஒழிப்புப் பிரிவு, சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஸ்பெஷல் ஆபீசர் என்ற பெயரில் புதிதாய் உருவாக்கப்பட்ட பிரிவுக்கும் முதல் அதிகாரியாக  இருந்தார்.

ஜூன் 1, 2013-ல் மீண்டும் காவல் துறையில் பணியாற்றும் வாய்ப்பாக, குணசீலனுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதாவது பணி ஓய்வு பெற்று 24 மணி நேரத்துக்குள் இப்படி ஒரு பம்பர் அடிக்க, சக காக்கி அதிகாரிகளே குணசீலனை  மிரட்சியாக பார்க்க ஆரம்பித்தனர்.

பணி நீட்டிப்பு என்பது ஓராண்டோடு நின்று விடவில்லை. அடுத்தடுத்து மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு ரெனியூவல் முறையில் போய்க் கொண்டே இருந்தது. எண்ணிப் பார்த்தால் மூன்று முறை குணசீலனுக்கு பணி நீட்டிப்பை அரசு அவருக்கு அளித்திருக்கிறது.

"மூன்று முறை பணி நீட்டிப்பு பெற்ற ஒரே குரூப்-ஒன் போலீஸ் அதிகாரி என்ற பெருமை இந்தியாவிலேயே குணசீலனுக்குத்தான் சேரும்" என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் விரல் விட்டு எண்ணுகிற வேலையை தமிழக அரசு கொடுத்திருக்கிறது.

ஆமாங்க, இந்த 31-ம் தேதியோடு, ஏ.எம்.எஸ்.குணசீலன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், 4-வது முறையாக அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் பணி நீட்டிப்போடு கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தும் ஏ.எம்.எஸ்.குணசீலனுக்கு கிடைக்கலாம் என்கிறது காவல்துறையின் சட்டக்குழு வட்டாரம்.

அமைச்சர்களே தொடர்ந்து ஆட்சியாளர்களின் குட்-புக்கில் நீடிக்க முடியவில்லை என்னும் இக்காலக்கட்டத்தில் ஒரு அரசுத்துறை அதிகாரி, ஒவ்வோர் ஆண்டும் மீண்டும் புதிதாய் பொறுப்பேற்றுக் கொள்கிற வாய்ப்பு கொடுக்கப்படுகிறதென்றால், அது, 'அதையும் தாண்டி' என்ற அளவீட்டிலேயே போலீஸ் ஏரியாவில் கவனிக்கப்படுகிறது.

குணசீலனின் குணாதிசயம் எப்படி? விசாரித்தேன்... ''எப்போதும் புன்னகை, பணிச்சுமை வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வார். கீழ் பணியாற்றிய எவருக்கும் இது வரை 'சார்ஜ்' கொடுத்ததில்லை. ஆனால், சார்ஜ் கொடுத்து விடுவாரோ என்ற சூட்டை குறையாமல் வைத்திருப்பார்.

இரவெல்லாம்  விழித்திருந்து கோப்புகளை பார்த்தாலும் காலை 5 மணிக்கு முன்னதாகவே, விழித்து பின், வாக்கிங், தியானம் என்று ரிலாக்ஸ் ஆகிக் கொள்வார். உடையில் சிறு கசங்களும் இல்லாதபடி பார்த்துக் கொள்வார். லேசான பவுடர் எப்போதும் முகத்தில் மினுமினுக்கும்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கான சிறப்புப் பணி, தற்போது குணசீலனுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்கின்றனர்.

-ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close