Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.வி.சிந்து Vs கரோலினா : பலமும்.. பலவீனமும்.. ஓர் அலசல்! #Go4GoldSindhu

’எதிர்நீச்சல் அடி.. வென்று, ஏத்து.. கொடி!’ என்று ஜாலியா வாலி சொன்னதைப் போல பல தடைகளைக் கடந்து இன்றைக்கு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றுவார் என்று இந்தியர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர் பி.வி.சிந்து!

இன்றைக்கு, இந்திய நேரப்படி 6.55க்கு தொடங்க உள்ள ஒலிம்பிக் 2016, பேட்மின்டன் பெண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், சிந்து எதிர்கொள்ள இருப்பது கரோலினா மெரின் என்ற ஸ்பெய்ன் வீராங்கனையை. இருவருக்குமான பலம், பலவீனங்களை அலசுவோம்.

கரோலினா, புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன். சிந்து நம்பர் 10!

  கரோலினா மெரின் இடதுகை ஆட்டக்காரர். பந்தை இடதுபக்கத்திலிருந்து அடித்தால், எதிராளியின் இடதுபுறமாக பறந்து விழும். அதாவது பி.வி.சிந்துவிற்கு இடதுபுறம். சிந்து வலது கை ஆட்டக்காரர். அவருக்கு இடதுபுறம் பறந்துவரும் பந்தை அடிப்பது கொஞ்சம் பலவீனம்தான். ஆனால் அதே போல சிந்து வலதுபுறத்திலிருந்து அடிக்கும் பந்து கரோலினாவுக்கு வலது புறமாக செல்லும். அவர் இடது கை ஆட்டக்காரர் என்பதால் அவருக்கும் இது பலவீனம்தான்.  

 சிந்துவின் ப்ளஸ் பாய்ண்ட் ப்ளேஸ்மெண்ட். கோர்ட்டின் எல்லா பக்கங்களிலும் பந்து விழும். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி கார்னர் டு கார்னர் அடிப்பதில் சிந்து கில்லி. அப்படி அடிப்பதால் எதிராளி சோர்வடைய வாய்ப்புகள் அதிகம். ஆனால், கரோலினா எளிதில் சோர்வடைகிற ஆள் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 பாட்மின்டனில் ‘லைன் கேம்’ என்று அழைக்கடுகிற கோட்டை ஒட்டி பந்தை அடிப்பதில் சிந்து ஷார்ப். எதிராளி இதில் நிலைகுலைய வாய்ப்புகள் அதிகம். கரோலினாவின் ப்ளஸ் பாய்ண்ட் ஸ்மாஷஸ்.

ஒப்பீட்டளவில், கரோலினா எளிதில் சோர்வாகிறவர் இல்லை. சிந்து, தொடர்ந்து ஆக்ரோஷமாகவே விளையாடவேண்டும்.

கரோலினாவின் பலம், பாய்ண்ட் எடுக்க ஆரம்பித்தால், அவரைத் தடுப்பது சிரமம். ஆனால் அதே சமயம், எதிராளி ஒரு பாய்ண்ட் எடுத்தால் மனதளவில் நிலைகுலைந்து தொடர்ந்து புள்ளிகளை விடுவார்.

கரோலினா, எப்போதுமே ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே இருக்கும் பேர்வழி. தனது ஆட்டிட்யூடால் எதிராளியை பலவீனப்படுத்துவார். சிந்து, இப்போதுதான் களத்தில் ஆக்ரோஷம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். சிந்துவின் பலம் என்னவென்றால், எதிராளி எத்தனை ஆக்ரோஷம் காண்பித்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது.

கரோலினா எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். சிந்துவுக்கு அது இன்னொரு பலம்!

 நம்பர் 10 பொசிஷனில் இருக்கும் சிந்து காலிறுதியில், நம்பர் 2-ல் இருக்கும் சைனாவின் வாங் இஹானை வென்றார்.  கரோலினா காலிறுதியில், நம்பர் 7-ல் இருக்கும் சங் ஜி-ஹ்யுன் என்ற சவுத் கொரிய வீராங்கனையை வீழ்த்தினார். அரையிறுதியில் கரோலினா ஜெயித்தது ரேங்கிங்கில் 3 வது இடத்தில் இருக்கும் சைனாவின் லி க்ஸுரி. சிந்து வென்றது ஆறாவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நசோமியை. ஆக ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சிந்துவின் கை ஓங்கியே இருக்கிறது. நம்பர் ஒன்னில் இருப்பவர் நம்பர் மூன்றை வெல்வதை விட, நம்பர் டென்னில் இருப்பவர் நம்பர் டூ-வை வெல்வது தரும் கான்ஃபிடெண்ட் லெவல் மிக மிக அதிகம்.

சிந்துவும், கரோலினாவும் இதற்குமுன் மோதிக்கொண்டது டென்மார்க்கில் 2015ல் நடந்த சூப்பர் சீரிஸ் ப்ரீமியரில். அந்தப் போட்டியில் சிந்து, கரோலினாவை வீழ்த்தியிருக்கிறார் என்பது சிந்துவுக்கு கூடுதல் பலம்.

விளையாட்டு வல்லுநர் ஒருவரிடம் பேசினோம்:

’சிந்து ரொம்பவெல்லாம் மெனக்கெட வேண்டாம். தப்பு எதுவும் பண்ணாம இருந்தாலே போதும். ஜெயிச்சிருவாங்க. கரோலினா என்னதான் நம்பர் ஒன்-னா இருந்தாலும் இன்றைய தேதியில் சிந்துவோட கான்ஃபிடெண்ட் லெவல் அபாரமா இருக்கு. தவிர கரோலினா சீக்கிரம் எமோஷனல் ஆகறதால ஒரு புள்ளி விட்டாலும், மனச்சோர்வு அடைவாங்க. சிந்து கடகடன்னு மேல வர வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

எல்லாவற்றுக்கும் மேல் சிந்துவின் ஆகச்சிறந்த பலம்.. அவரது கோச்! கோபிசந்த். நிச்சயம் தங்கப் பதக்கத்தை பெற்றுத்தராமல் விடமாட்டார்!

கமான் சிந்து.. கொண்டாட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்தியா!

-பரிசல் கிருஷ்ணா

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ