Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய விளையாட்டு தினம்: பிராட்மேன், ஹிட்லர் பாராட்டிய தயான் சந்த்… #HBDDhyanChand

இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். அவரைப் பற்றி பலரும் அறியாத சில விஷயங்கள் இதோ!

சந்த் என்பது இவரது இயற்பெயர் அல்ல, அவருடைய நண்ப‌ர்கள் அவருக்கு அளித்த பெயர். இவர் தன் 16வயதில் இந்தியப் போர்ப்படையில் சேர்ந்தார். பகல் பொழுதில் வேலை, இரவில் விளையாட்டுப் பயிற்சி. நிலவு வரும் வேலையில் பயிற்சி செய்வதால் இவரை இவரது நன்பர்கள் சந்த் என்று அழைத்தனர். சந்த் என்றால் ஹிந்தியில் நிலவு என்று அர்த்தம்.

இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. தன் அசாத்தியமான ஹாக்கி பந்தை கையாலும் திறனைக் கண்டு இவரை தீ விஸார்ட்(The Wizard)-மந்திரவாதி என்று அழைத்தனர். இவர் தன்னுடைய சர்வதேச போட்டிகளில் 400 மேற்பட்ட‌ கோல்களை அடித்துள்ளார்.

1928ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் சந்த் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியா அந்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற செய்தியை ஒரு நாளிதல் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது “This is not a game of Hockey, but magic. Dhyan Chand is, in fact the magician of Hockey”. இதன் தமிழ் அர்த்தம் “இது ஹாக்கி விளையாட்டல்ல, மாயாஜாலம். தயான் சந்த் இந்த ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி”. 

1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அமெரிக்காவை 24-1 மற்றும் ஜப்பானை 11-1 என்று வீழ்த்தியது. இதில் தயான் சந்த் 12 கோல்கள் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங் 13 கோல்கள் அடித்தனர். உலகம் இவர்களை “ஹாக்கி இரட்டையர்கள்” என்று அழைத்தது.

 

இவர் இவ்வளவு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தாலும் சந்த்தை பொருத்தவரையில் எது சிறந்த போட்டி என்று கேட்டால் கல்கத்தா கஸ்டம்ஸ் மற்றும் ஜான்சி ஹீரொஸ்-கு இடையே 1933ஆம் ஆண்டு நடந்த பெய்டன் கோப்பை இறுதிப் போட்டியே என்று அவரே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “அந்த நாட்களில் கல்கத்தா அணி மிகப் பெரிய அணி. ஷௌகட் அலி, ஆசாத் அலி, கிலௌட் டீஃஹோல்ட்ஸ், சீமன், மொசின் போன்ற பெரிய வீரர்கள் இருந்தார்கள். எங்கள் அணி மிகவும் இளம் அணி. ரூப் சிங், இஷ்மாயில் தவிர சிறந்த வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் எங்கள் அணி “செய் அல்லது செத்து மடி” என்ற மனப்பான்மை கொண்ட வீரர்கள் இருந்தார்கள். இது ஒரு பெரிய ஆட்டம், திருப்பங்கள் நிறைந்து இருந்தன, ஒரு சிரு வாய்ப்பு எங்களுக்கு வெற்றியை அளித்தது.கல்கட்டா அட்டம் சிறப்பு, எங்களுடைய கோல்கள் அவர்களுடைய கருனையில் கிடைத்தது. திடீரென நான் பந்தை கொண்டு உள்ளே சென்றேன். பந்தை இஸ்மாயிலுக்கு அடித்தேன். அவர் ஜெஸ்ஸி ஓவென்ஸ் வேகத்தில் சென்றார். ஒரு சிறு குழப்பம் எதிர் அணியில். அதை தனக்கு சாதகமாக மாற்றிய இஸ்மாயில் கோல் அடித்தார். எங்கள் அணி வெற்றி பெற்றது” என்று கூறினார்.

1935ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவின் ஒரு தலைசிறந்த கிரிக்கட் வீரர் டான் பிராட்மன் சந்த்-ஐ அடிலைடு மைதானத்தில் சந்தித்தார். அப்போது சந்த்-ஐ அவர் “இவர் கிரிக்கட்டில் ரன்கள் சேர்ப்பது போல ஹாக்கியில் கோல்கள் அடிக்கிறார்” என்று புகழாரம் சுட்டினார்.

ஹிட்லர் கண்டு வியந்த மனிதர் தான் தயான் சந்த். நாம் அனைவரும் ஹிட்லரை கண்டு வியந்திருப்பொம்,ஆனால் ஹிட்லரே தயான் சந்த்-ஐ கண்டு வியந்துள்ளார். அது 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக். இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதியது, இந்தியா. ஆவலுடன் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் ஹிட்லர். இந்தியா வெற்றி பெற்றது. தயன் சந்த் அருமையாக விளையாடினார். தயான் சந்த்-இன் ஆட்டத்தை கண்டு வியந்த ஹிட்லர் அவருக்கு மேஜர் பதவி, ஜெர்மனி நாட்டுரிமை, மற்றும் பல சலுகைகளை அளித்தார். அவர் நினைத்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் பணிவாக மறுத்துவிட்டார்.

 

கோல்கள் பல குவித்த தயான் சந்த்-இன் சுயசரிதையான “கோல்!” என்ற புத்தகத்தை 1952ஆம் ஆண்டு மெட்ராஸில்( தற்போதைய சென்னை) ஸ்போர்ட்ஸ் & பாஸ்டைம் வெளியிட்டது.

ஒருமுறை சந்தின் ஹாக்கி மட்டையில் காந்தம் உள்ளதா என்று உடைத்துப் பார்த்தனர் அதிகாரிகள். அதற்கு பதில் கூறும் விதமாக அடித்த ஆட்டத்தில் ஒரு கைத்தடியை கொண்டு ஹாக்கி விளையாடினார். அதிலும் கோல்கள் அடித்தார்.
தயான் சந்த் 3ஆம் அக்டோபர் 1979ஆம் ஆண்டு இறந்து போனார். ஆனால் அவர் இறந்த பிறகு கூட இன்றைய வரைக்கும் ஹாக்கியில் ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார். மேலும் இவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது இந்திய அரசு. மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோனாச்சாரியா விருது மற்றும் பத்ம புஷன் விருது ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது.

முரளி.சு
மாணவப் பத்திரிகையாளர்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ