Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் நிமிடங்கள்...!

வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள்,  துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே  9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு  அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.

 

முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், “திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

 

 

வியாழக்கிழமை இரவு 9 மணி: போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

9. 30 மணி: முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

10. 15 :  ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடன் சசிகலா இருக்கிறார்.  சிறிது நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் வருகிறார்.

10.30 : கிரீம்ஸ் ரோடு சாலையில்  அதிகளவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.

1. 00: அப்போலோ மருத்துவ நிர்வாகம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடுகிறது. 

1.05: முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

1:10: தொண்டர்கள் குவிகிறார்கள்.

1. 30 : கீரிம்ஸ் ரோடு சாலை மூடப்படுகிறது

1. 40 : சைதை துரைசாமி மருத்துவமனைக்கு வருகிறார்.

2.05: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வருகிறார்.

2.30:  அமைச்சர் ஜெயக்குமார் வருகிறார்.

3.00: தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன்  மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்த ஷீலா நாயர் மருத்துவமனைக்கு வந்தார்.

3.30: சாந்த ஷீலா நாயர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.

அதிகாலை 5 மணி : முன்னாள் அமைச்சர் சின்னய்யா, முன்னாள் காவல் துறை அதிகாரியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான  நட்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு வந்தனர்.

7.30 மணி தகவல்: முதலமைச்சருக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருந்தது. அதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதன்பிறகு நுரையீரல் நீர் அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அப்சர்வேசனுக்காக இன்று முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தகவல் வெளியானது.

9.00 மணி: தற்போது கீரிம்ஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்துள்ளனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

10.00 மணி: இதுவரை மருத்துவமனை வெளியே காக்கவைக்கப்பட்ட  அமைச்சர்கள் தற்போது உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10.10 மணி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை வந்தார்.

 

10.20 மணி: தங்கமணி, வேலுமணி மற்றும் இரண்டு அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் மெயின் ப்ளாக்குக்குள் அனுமதி

10. 30 : மணி: ஜெயலலிதா நலம் பெற வேண்டி திநகர் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. அந்த பிரசாதத்துடன் ஒரு அர்ச்சகர் குழு மருத்துவமனைக்கு வந்தனர்!

11.00: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் மெயின் ப்ளாக்குக்குள் சென்றுள்ளார்.

 

11.35: உள்ளே சென்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வருகின்றனர். அமைச்சர்களை அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறும் படி முதல்வர்  சொன்னதாக கூறப்படுகிறது.

 

12.20: மருத்துவமனை சார்பில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தற்போது இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல்வர் நலமாக உள்ளார், தற்போது  காய்ச்சல் இல்லை, உணவு அருந்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.00: மருத்துவமனை எதிரே தொண்டர்கள் பிரார்த்தனை

2.45: மருத்துவமனைக்கு வந்த சட்டபேரவை தலைவர் தனபால்

4.30: முதல்வர் நலம் பெற வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பூங்கொத்து அனுப்பி கடிதம் எழுதியுள்ளார். மேலும், மக்களுடைய பிரார்த்தனை எப்போதும் முதல்வரை நலமுடன் வாழ வைக்கும் என்று கூறியுள்ளார். இதனிடையே, ஜெயலலிதா நலம் பெற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மக்களுடைய பிரார்த்தனை உங்களுடன் எப்போதும் இருக்கும். விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

 - மு. நியாஸ் அகமது, ஜோ.ஸ்டாலின், ந.பா. சேதுராமன், கிருபாகரன், க.பாலாஜி | படங்கள் :   செந்தில்குமார், ஆ.முத்துக்குமார், குமரகுருபரன், நிவேதன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ