Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினசரி பிரச்னைகளுக்கான தீர்வு தேடும் டெக் சங்கமம்! #VikatanHackathon

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி நுழையாத இடமே இல்லை என்ற நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சாஃப்ட்வேர் துறையில் நிகழும் வளர்ச்சி, மிகப்பெரிய நிறுவனங்களின் மேம்பாடு என்பதையெல்லாம் தாண்டி சமூக அக்கறையுடன் தொழில்நுட்பத்தை சமூக மாற்றங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வை வழங்க இந்தியாவின் இளம் தலைமுறைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தான் விகடன் ஹேக்கத்தான்.

இந்தியா முழுவதில் இருந்தும் வந்த 380 ஐடியாக்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த 40 ஐடியாக்களுடன், 133 பங்கேற்பாளர்களுடன் சென்னை Thought works நிறுவன  அலுவலகத்தில் துவங்கியது டெக்கீஸ்களின் சங்கமம்.

இங்கு இவர்களது ஐடியாக்கள் மெருகேற்றப்பட்ட அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அடுத்த 50 மணி நேரத்தில் சமூக பிரச்னைக்களுக்கான தீர்வை டெக்கீஸ் உருவாக்க உள்ளார்கள்.

இவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான வழிகாட்டுதலுக்கு 34 cross - Hasura   நிறுவனத்தின் Cofounder தன்மய் கோபால் மற்றும் அவரது அணியினரும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான வழிகாட்டுதலை முருகப்பா குழும துணை தலைவர் எம்.எம்.முருகப்பன், கவின்கேர் நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.கே.ரங்கநாதன், ஸ்ரீடெஸ் ஷாசன் பாரமடிகல்ஸ் நிர்வாக இயக்குனர் அபய் குமார், மேத்தா மருத்துவமனை இயக்குநர் சமீர் மேத்தா, ஜி.ஆர்.டி குழும நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன் ஆகியோர் வழங்க உள்ளனர்.

 

இதில் மிகச்சிறந்த ஐடியாக்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக ஏஞ்சல் இன்வெஸ்டார் பத்ம சந்திரசேகரன் , சேர்மன் ஆச்சி மசாலா A.D.பத்மசிங் ஐசக்,  சுரேஷ் சம்பந்தம் சிஇஓ ஆரஞ்ச்ஸ்கேப், முருகவேல் ஜானகிராமன் சிஇஓ மேட்ரிமோனி.காம் ஆகியோர் சிறந்த 3 ஐடியாக்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

அடுத்த 50 மணி நேரத்தில் விகடன் ஹேக்கத்தான் மூலம் இந்த சமூகத்தின் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய இந்த டெக் இளைஞர்கள் தயாராகிவிட்டனர். விவசாயம், பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி என பல துறைகளுக்கான தீர்வில் வெல்லபோகும் ஐடியா எது என்பது நாளை தெரிந்துவிடும்.

இந்த டெக் சங்கமம் சமுகத்துக்கான சிறந்த தொழில்நுட்ப தீர்வை வழங்கட்டும்.

படம் - குமரகுருபரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ