Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது.. சரியா... தவறா? உங்கள் கருத்து என்ன? #PeopleSurvey

’தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்’ என்று வியாழக்கிழமை நள்ளிரவு பரவிய ஒற்றைச் செய்தி சமூகத்தின் பல்வேறு தளங்களில் அழுத்தமான விவாதங்களை எழுப்பி உள்ளது. அதில், ’தமிழக முதல்வரே அரசு மருத்துவமனையைப் புறக்கணிக்கலாமா’ என்பதும் ஒன்று.  ரூபாய் 1,200 கோடியில் கட்டப்பட்ட தமிழக சட்டசபைக் கட்டடத்தை 400 படுக்கை வசதிகளுடன் கொண்ட  நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றியவர் ஜெயலலிதா. இன்று, அவரே அந்த மருத்துவமனையைப் புறக்கணித்துவிட்டுத் தனியார் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.  பணம் படைத்தவர்கள், தனியார் மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பது என்பது வேறு... ஆனால், அரசை நிர்வகிப்பவர்களே, அதைப் புறக்கணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

ஜெயலலிதா மட்டும் அல்ல... கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், தன் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குத் தேர்ந்தெடுத்தது தனியார் மருத்துவமனையைத்தான்.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், கடைசியாக அரசு மருத்துவனையைப் பயன்படுத்திய முதல்வர் அண்ணாதுரை தான். புற்று நோய்க்கான ஆரம்ப கட்ட சிகிச்சையை  அரசு மருத்துவமனையில் எடுத்துவிட்டு மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.  அவருக்கு முன்பாக,  அமைச்சர் கக்கன் அரசு மருத்துவமனையை மட்டுமே இறுதிவரை பயன்படுத்தி இருக்கிறார்.

 

எம்.ஜி. ஆர் ஆட்சி காலத்திலிருந்து இப்போது வரை அமைச்சர்கள் தொடங்கி... முதல்வர்கள் வரை தனியார் மருத்துவமனையைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 

ஓர் அரசு, தாங்களே நம்பாத ஒரு விஷயத்தைத் தங்கள் குடிகள் மீது திணிப்பது எப்படி அறமாக இருக்க முடியும்...?  கருணாநிதியோ, ஜெயலலிதாவோ... நிச்சயம் ஆள்பவர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசும் நன்றாக இயங்க முடியும். ஆனால், அந்த ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அளவுக்குத் தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையா..?

 

ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும். அதற்காக அவர், நம்பும் எந்த மருத்துவமனையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும்; எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; நலம்பெற்று வரட்டும்.  அதே நேரம், தமிழக அரசு மருத்துவமனைகள் குறித்து ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நாம் மேற்கொள்வோம்.

இத்துடன் சில கேள்விகளை இணைத்துள்ளோம். அதற்கான பதில்களை அளியுங்கள். நாளை காலை 11 மணி வரை தளத்தில், இந்தக் கேள்விகள் இருக்கும்.


வாக்களிக்க இங்கே க்ளிக் செய்க....

 








வாக்களித்ததுக்கு நன்றி

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ