Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது.. சரியா... தவறா? சர்வே முடிவுகள்...!

 

முதல்வர் ஜெயலலிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது.. சரியா... தவறா?   என்ற தலைப்பில் நேற்று விகடன் இணையதளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். வெறும் கருத்துக்கணிப்பாக மட்டும் இல்லாமல், அதில் மக்களின் யோசனைகளையும் கேட்டு இருந்தோம். அதில் பெரும்பாலானவர்கள், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து இருந்தார்கள். அதற்கு அவர்களே ஒரு வழியையும் சொல்லி உள்ளார்கள்.  அதாவது,  ‘அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் அரசு மருத்துவமனைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். மேலும், அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினாலே, அரசு மருத்துவமனைகளின் தரம் தானாக மேன்மை அடையும்’ என்று யோசனையும் வழங்கி இருக்கிறார்கள்.

கருத்துக் கணிப்பு முடிவுகள்,

 

 

 

 

 


தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்...? என்பதற்கான மக்களின் ஆலோசனைகள்...

  • மருத்துவம் வியாபார மயமாவதை தடுக்க வேண்டும். மருத்துவம்,கல்வி இரண்டும்  அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தனியார் மருத்துவரோ அரசு மருத்துவரோ யாராக இருந்தாலும் மேலை நாடுகள் போல் ஊதியம் இன்சூரன்ஸ் மூலம் மட்டுமே கிடைக்க வேண்டும். அனைத்து குடிமக்களின் மருத்துவ சிகிச்சைக்கான பணமும் இன்சூரன்ஸ் முலம்  அரசே வசூலிக்க வேண்டும்.
     
  • அரசு அதிகாரிகள் முதலில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்
     
  • அனைத்து அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அரசு மருத்துவமனைகள் நிச்சயம் தரம் உயர்வு பெரும்.
     
  • தமிழகத்தில் வாக்குகளை பெறுவதற்கும் வாக்காளர்களை கவர்வதற்கும் ஏராளமான இலவசங்களால் பலநூறு கோடி ரூபாய் விரயம் செய்யப்படுகிறது. அரசு நினைத்தால் மருத்துவத்தையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்த முடியும். காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பல நூறுகோடி ரூபாய் மூலம் தனியார் மருத்துவமனைகள் லாபம் அடைவதற்கு பதிலாக  அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தால் லட்சக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதின் மூலம் காப்பீட்டுத் திட்டத்தால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அரசு மருத்துவமனைக்கு வருவாய் கிடைக்கும் இந்த நிதியை வைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த முடியும். அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் செய்ய முடியாத ஒரு சில சிகிச்சைகளை மட்டும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் செய்திட அனுமதி வழங்கலாம்.
     
  • மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பப்வேபடண்டும். நவீன உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அதனை இயக்குவதற்கான முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
     
  • போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.
     
  • அரசு டாக்டர்கள் தனியே கிளினிக் வைப்பதையும் வேலை செய்வதையும் தடுக்க வேண்டும்.
     
  • புதிய தொழில் நுட்பம் அரசு மருத்துவமனையில் இல்லை, அதனால் பாதுகாப்பான சிகிச்சை இல்லை  அடஅடிப்படை வசதிகள் இல்லை. தரமான சிகிச்சை இல்லை. இவைகளை சிறப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்.
     
  • அரசு  ஊழியர்கள்  சட்ட மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள்  அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறவேண்டும்  என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.
     
  • நீங்கள் இலவசம் கொடுக்க வேண்டாம்,150000 லட்சம் கோடி பட்ஜெட் இந்தியாவிலே 3 மாநிலன்கள்தான் போடுகிறது,1 வர்த்தக தலை நகரம் கொண்ட மஹாராஷ்டிரா ,2 ,20 கோடி ஜனத்தொகை கொண்ட உத்தரபிரதேசம்,3,தமிழ்நாடு, எனவே ,நீங்கள் அணை கட்டுங்கள், நல்ல சாலை வசதி செய்யுங்கள்,சுகாதார துறையை மேம்படுத்துங்கள்,போதும்.
     
  • அரசு தலைமை மருத்துவர்கள்  தனியார் மருத்துவமனைகள் போல் பராமரிப்பு செய்து நோய்யாளிகளை கவனிக்க வேண்டும் .அந்த அளவுக்கு அரசுக்ககும் அரசு தலைமை அதிகாரிகளும் பொறுப்பு வரவேண்டும் ஆனால் இன்னும் மூன்று தலைமுறை மாறினாலும் நமது நாட்டுக்கு வராது என்று அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்த போது கூறியது தான் முழுக்க முழுக்க உண்மை

                             1) மருத்துவ பட்ஜெட் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
                             2) மருத்துவர்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
                             3) அனைத்து மாடர்ன் உபகரணங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.
                             4) அனைத்து ஜெனிடிக் மருந்துகளும் மருத்துவமனையிலேயே கிடைக்க செய்ய வேண்டும்.
                            5) வேலை நேரம் போக, ஒரு மருத்துவர் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே, தனியாக ப்ராக்டிஸ் குறைந்த கட்டணத்தில் செய்ய அனுமதிக்கப்படவேண்டும். அதில் வரும் வருமானத்தில், மருத்துவருக்கு 60% மருத்துவமனைக்கு 40% என்று பிரித்து கொடுக்கலாம்.
 

  • லஞ்சம் இல்லாமல் இருந்தால் சுகாதார துறை மேம்படும். அரசு செய்ய வேண்டிய  கல்வி துறை, சுகாதார துறை தனியார் செய்கிறது, தனியார் செய்ய வேண்டிய மது விற்பனை அரசு தெருக்கு தெரு விற்பனை செய்கிறது இதனால் ஏற்படும் சுகாதார கேடுகளுக்கு என்ன செய்ய போகிறது? சமீபத்தில் அரசு மருத்துவ மனை நிலவரத்தை படம் பிடித்து ஒரு தமிழ் நாளிதழ் படத்துடன் பிரசுரித்து இருந்தது. அரசு மருத்துவ மனைக்கு சென்றால் வேறு பல வியாதிகள் இலவசமாக கிடைக்கும். அந்த நிலையில் முதலமைச்சர் எப்படி அங்கு செல்வார்? அரசு மருத்துவமனை யாருக்காக என்றால் சமுதாயத்தில் பின் தங்கி உள்ள மக்கள் அவர்களுக்குத்தான் என்று அரசு நினைக்கிறது. இது தமிழகத்தின் சாப கேடு.  
     
  •  மருத்துவத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் முறைகேடில்லாமல், சரியான கட்டமைப்புகள், உபகரணங்கள், மருந்துகள் தொடர்ந்து வழங்க வேண்டும்.
     
  • மருத்துவர்கள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை  போதுமான ஊதியம் வழங்கி, அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துவதை, அங்கு பணி புரிவதைத் தடுக்க வேண்டும்.
     
  •  சுருக்கமாக அரசியவாதிகள் தலையீடு இருக்கக்கூடாது, அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் தண்டனை வேண்டும்.
     
  • அந்த அளவுக்கு அரசுக்ககும் அரசு தலைமை அதிகாரிகளும் பொறுப்பு வரவேண்டும் ஆனால் இன்னும் மூன்று தலைமுறை மாறினாலும் நமது நாட்டுக்கு வராது என்று அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்த போது கூறியது தான் முழுக்க முழுக்க உண்மை

     
  • மருத்துவமனை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்க அனுமதிக்க கூடாது.  மருத்துவமனையில் புகார் பெட்டிகளை அமைத்து அதில் வரும் புகார் கடிதங்களை படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

      

  • உடனடியான மாற்றம் சாத்தியமில்லை. ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களிடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தனிமனிதஒழுக்கம், பிறர் நலன் பேணுதல்,  மேன்மையான இரக்க சிந்தனை,  தேசப்பற்று, ஒற்றுமை,   தலைமைப்பண்பு மற்றும் சகிப்புத்தன்மை உள்ள மாணவர்களை உருவாக்கிவிட்டால் வருங்காலத்தில் இந்நிலை உருவாகாது.
     
  •  அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும். அங்கு உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள், நவீன தொழில்நுட்பங்கள், ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் நடைபெறும் ஊழல்கள், லஞ்ச லாவணியத்தை ஒழிக்க வேண்டும்.  மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மையை பேண வேண்டும். சிறந்த நிர்வாக திறன் கொண்டவர்களை பணியமர்த்த வேண்டும். அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தும் காப்பீடு திடத்தை அரசு மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அங்குள்ள சீர்கேடுகளும் தரமின்மையும் வெளியில் தெரியும். அரசை நிர்வகிக்கும் முதல்வருக்கு அவரின் நிர்வாகத்தின் மீது உள்ள நம்பிக்கையை தற்போது நடந்துள்ள நிகழ்வு காட்டுகிறது.
     
  • Organising and regularising volunteers at all levels from ward boys to doctors. Allowing NGOs to donate and maintain medical equipment's. All the doctors who completed studies in India and the doctors who studied abroad but wants to work in India should work in government hospitals every year for fixed hours  hours fixed by government time to the convenient of the doctors to share and to improve their knowledge.
     
  • மற்ற இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும் நிதியை  சுகாதாரம் மற்றும் கல்விக்கும் முழமையாக செலவழித்தால அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள் சிறப்பாகும்.
     
  •  Lead by example - All Government officials and staff should go to Government Hospital for their care. Don't accept any insurance claims from private hospitals until they went through Government hospitals for their care. This would make all private sector people to go to Government hospitals until proper justification of why they couldn't get the treatment from Government hospital. Improve the hospital environment by keeping them clean. Maintain the standard by imposing penalty for any patient's improper behavior.  It's all awareness and how we promote to people.Increase doctor-patient ratio to 1000:1 which is recommended by WHO; Improve government hospital infrastructure by installing basic/advanced medical equipment wherever needed/applicable, increase nurses/technicians.
     
  • மருந்துகள் கையிருப்பு, பயன்பாடு, பற்றிய முழுமையான வகை கூறக்கூடிய அறிக்கை இருக்க வேண்டும். உபகரணங்களின் தொகை தரம் பற்றிய தொடர் அறிக்கை வகை கூறக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அங்கு பணியாற்றும் டாக்டர்களுக்கு தகுந்த சம்பளம், ஓய்வூதியம், பிற சலுகைகள் இருக்க வேண்டும். இதர தொழிலாளிகட்கும் மரியாதையான கொடுப்பனவு இருக்க வேண்டும்.  அரசு மருத்துவ மனைகளின் தொகை அதிகரிக்க படவேண்டும். சிறந்த நம்பிக்கைக்குரிய கண்காணிப்பு வேண்டும்.
     
  • முதலில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு நல்ல மருத்துவ திறமையான, அனுபவம்மிக்க, மற்றும் தொழில்நுட்ப அறிந்தவர்கள்  கொண்ட ஒரு உறுப்பினர்அமைந்த குழு உருவாக்கி, மேல்நாடுகளுக்கு சென்று அவர்களது சேவை மற்றும் தொழில்நுட்பம் பார்த்து  அங்கு உள்ளது போன்று இங்கும் அமைத்தால் மிகவும் குறைந்த அளவிலான செலவில் பொது மக்கள் பயன் படுத்தும்படி இருக்க செய்ய வேண்டும், அது தான் அரசின் தலையாய கடமை.
     
  • தனியார் வசம் இல்லாத துறைகளே இல்லை.இந்த நிலைமைக்கும் கருவியாய் செயல் பட்டதே அரசுதான்.எனவே இனி எந்த அரசாலும் மாற்றம் கொண்டு வருதல் என்பது  அவ்வளவு எளிதான செயல் அல்ல.பள்ளி,கல்லூரிகள் அரசிடமிருந்து தனியார் வசமாக அடிகோலியது போல்,மருத்துவத்தையும்  அரசு நடுத்தர மக்களுக்கே அரிய பொருளாய் விலை கூடியதாய் மாற்றி விட்டது. அரசு ஆரம்ப மற்றும் மேநிலைப் பள்ளிகள் நிலைமைக்கும் கீழே சென்று விட்டது அரசு மருத்துவ மனைகள்.காரணம் தரமில்லா சிகிச்சை.இதை மாற்ற காலம் அதிகமானாலும் அரசு மருத்துவ கல்வி தொடங்கி ,மருத்துவர்,செவிலியர்,கருவிகள்,நவீன சிகிச்சை முறைகள் என எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
     
  • அரசுப் பணியாளர்கள்,அதிகாரிகள்,அமைச்சர்கள் முக்கியமாய் முதல்வர் என எல்லோருக்கும் அரசு மருத்துவம் கட்டாயமாக்கப் பட்டு ,தனியார் வசமுள்ளவைகளும் அரசுடைமையாதலும் அவசியம்.
     
  • ஓமதூரார் சட்டசபை வளாகத்தை மூடிவிட்டு அதை உலக தரம் வாய்ந்த உயர் சிகிச்சை மருத்துவமனை என்று அறிவித்துவிட்டு இன்று இதே ஜெயலலிதா உடல்நலக்குறைவு என்று தனியார் மருத்துவமனையில் அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் என்ன நியாயம்? தன்னை வாக்களித்த மக்களுக்கு தரமான மருத்துவமனைகளும் மருத்துவர்களையும் இல்லாதபோது? அப்போ ஜெயலலிதா உயிர்யென்றால்! ஒரு நியாயம் மக்கள் உயிர் என்றால்! ஒரு அலட்சிய போக்கு. இந்த நிலை மாற வேண்டுமென்றால்! கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அனைத்தும் அரசு மருத்துமனைகளையும் தரம் உள்ளதாக உயர்த்த வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே தரத்துடன் ஏழை மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும்.
     
  • அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகள்/ கிளினிக்குகளை நிறுவக்கூடாது.அனைத்து மருத்துவப்பணியிடங்களும் நேர்மையான முறையில் நிரப்பப்பட வேண்டும். தனியாரில் உள்ள அனைத்து சிகிச்சைகளும் அதே தரத்துடன்.. அதே கனிவுடன் மேற்கொள்ள வேண்டும்.!!
     
  • All Politicians should take treatment at government hospital
     
  • மருத்துவ செலவுகள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பெருஞ்சுமையாகிப் போயுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களும், கட்டமைப்பு வசதிகளும் குறைவாக உள்ளன. அதே சமயம் மிகப்பெரிய உயர் சிறப்பு மருத்துவமனைகளும் தமிழகத்தில் உள்ளன. இத்தகைய ஏற்றதாழ்வான நிலையை மாற்றி - தொடக்க நிலையிலேயே நோய்களைச் சரிப்படுத்தும் அளவுக்கு மருத்துவமனைகளை அதிகரிப்பதும், நவீன உபகரனங்களை எல்லா மாவட்ட, நகர அளவில் உள்ள மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்வதும். மறுத்துவ முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சையளிக்கும் ‘இண்டெகிரேட்டட்’ முறையைக் கொண்டுவருவதும் அவசியம்.
     
  • அனைத்து மந்திரிகளும், எம்.எல்.ஏ - க்களும், அரசு அதிகாரிகளும் அவர்கள் குடும்பத்தினரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுக்கவேண்டும் என சட்டம் கொண்டுவரணும்.
     
  • டாக்டர்கள் சரியாக வேலை செய்வது இல்லை.டாக்டர்களை கண்காணிக்க ஒரு துறை வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை செய்ய கூடாது. அரசு நிர்வாகம் சரியாக இல்லை.
     
  • போதுமான நிதி.. அந்த நிதியை சரியாக செலவு செய்ய ஊழலற்ற அதிகாரிகள்....சுகாதாரத்தை மையப்படுத்திய அரசு கொள்கைகள்... மேலும் அதிக அரசு மருத்துவக்கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், மற்றும் இதர மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்.
     
  • மாதம் மாதம் அரசு மருத்துவமனை வெள்ளை அறிக்கை தரவோண்டும் . அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் / தனியார் மருத்துவ மனையில் பனியாற்ற கூடாது..
     
  • அரசு மருத்துவமனை பக்கத்துல இருந்தா கவுரவம் பாக்காம போகலாம். அங்க சூப்பராவே இருக்கு!
     
  • தனியார் மருத்துவமனைகளை மூடினால் அரசு மருத்துவமனை தானாக மேம்படும்.
     
  • TN Government to provide the facility same as in Chennai Rajiv Gandhi GH in all GH around the state and need to increase the number of hospital similar to Omandhurar Hospital. Need to improve the cleanliness among the patient visits hospital. I recently visited Chennai Rajiv Gandhi GH and it is good and maintained properly. The same to kind of situation must be there at least in district head hospital. CM preferred Private Hospital because she should not give any inconvenience to the general public who mostly visit Govt Hospital.  Please don't politicalise this.
     
  • தனியார் மருத்துவமனைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் அரசிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை, அரசு மருத்துவமனையை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தினால், குறைகளை அவர்களே தட்டி கேட்ப்பார்கள். மருத்துவ துறைக்கு ஒதுக்கப்படும் நிதியால், மருத்துவமனைகளும், மக்களின் சுகாதாரமும் மேம்படும். இது சாத்தியப்பட வாய்ப்பில்லை. காலம் மாறும் என்ற நம்பிக்கையோடு, இந்நாளை கடப்போம்.
     
  • உண்மையாகவே மருத்துவம் படித்து அனுபவம் பெற்ற, சேவை மனப்பான்மை உள்ளம் கொண்டு, மனசாட்சியை அடமானம் வைக்காமல்,ஏழை பணக்காரன் என்ற தராதரம் பார்க்காமல்,வைத்தியம் செய்ய நல்ல எண்ணம் கொண்டவர்களை சுகாதார அமைச்சராகவும்,மருத்துவ மனைகளின் சிறப்பு வைத்தியர்களாகவும் அரசியல் சாயம் பூசாமல் பதவியில் அமர்த்தி, மக்களுக்கு நல்ல நம்பிக்கை ஏற்படுத்த அரசு முயல வேண்டும்!
     
  • இது தேவை அற்ற விவாதம் . வியாதியின் தன்மை , மருத்துவரின் அனுபவம் ,அணுகு முறை ஆகியவைகள் மற்றும் நோயாளியின் மனநிலை  ,இவைகள் முக்கியமாக கருதப்படுகின்றன . மேலும் அம்மா போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்தால் , அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சாதாரணமான மக்கள் நிலையை எண்ணிப்பாருங்கள்.
     
  • One day i went to GH for my brother's illness..there that doctor have not given any kind of respect and also no care as like doctor's do in private...atleast they should have some humanity.
     
  • மருத்துவமனைகள் யாவும் அரசினால் நடத்தப்பட வேண்டும். நிர்வாகத்தை ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நிர்வாகம் ஏற்கவேண்டும். தனியார் மருத்துவ மனைகளையும் அரசு கையகப்படுத்தி புதிய பாணி மருத்துவத்துறை. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவை ..தனி பட்ஜெட் என இயங்கவேண்டும்.
     
  • அரசு மருத்துவமனை நன்றாக தான் உள்ளது.  அரசு மருத்துவமனை  பாதுகாப்பு உள்ளிட்ட இடையூகள் ஏழை நடுத்தர மக்கள் சந்திக்க கூடாது என்பது தான் நோக்கம். அதனால் தான் தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தார்.
     
  • First improve the Basic infrastructure of all existing hospitals, make sure all medicines and doctors are available 24/7, dont give permissions for new private hospitals,regularize Hospital fees in all private hospitals.
     
  • கட்சி சார்பற்ற சேவை மனப்பான்மையுள்ள வைத்தியத் துறைசார்ந்தோர் கொண்ட ஒரு குழுவிடம் இத்துறை அரச மேற்பார்வையுடன் ஒப்படைக்க வேண்டும். நாளாந்த நடவடிக்கைகளை சாதாரண குடிமகனும் அறியக்கூடிய வகையில் வெளிப்படையாக இருப்பதுடன், கணணி மயமாக்கல் வேன்டும்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ