Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோவுக்குள் நுழைய முயன்ற பெண் சாமியார்..! பரபர நிமிடங்கள்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு அருள்வாக்கு சொல்ல முயன்ற சேலம் பெண் சாமியாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, முதல்வர் உடல் நலம் குறித்து வதந்திகள் பரவின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்போலோ மருத்துவமனையிலேயே முதல்வர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அந்த இடத்திலேயே கற்பூரம் ஏற்றியும் தொண்டர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கையில் சூலாயுதம் ஏந்தியபடி பெண் சாமியார் ஒருவர் வந்தார். மருத்துவமனைக்குள் அவர் செல்ல முயன்றார். அவரை பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் தடுத்தனர்.

 

அப்போது பெண் சாமியார், அருள்வந்து 'அம்மா நூறுவருஷம் நல்லா இருப்பார்கள்' என்று ஆவேசத்துடன் கூறினார். தொடர்ந்து அவரை பெண் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பெண் சாமியார் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரது பெயர் ஜெயந்தி என்றும், சேலம் மாவட்டம், அழகாபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, "நேற்றிரவு அப்போலோ மருத்துவமனை முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தோம். அப்போது ஒரு பெண் சாமியார், கையில் சூலாயுதத்துடன் வேகமாக வந்தார். அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அம்மாவைப் பார்த்து அருள்வாக்கு சொல்லப்போகிறேன் என்றவர், திடீரென அம்மா என்று கூச்சலிடத் தொடங்கினார். உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் வந்து அவரிடம் பேசினர். பிறகு அங்கு இருந்த போலீஸாருக்கு விபூதி கொடுத்து விட்டு அவர் சென்றார்" என்றனர். 

எஸ்.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close