Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பி அடித்த இந்தியா...! பதற்றத்தில் பாகிஸ்தான்...!#SurgicalAttack

ன்று காலை இந்திய ராணுவத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அந்த அறிக்கையில் அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா ?

‘நேற்று இரவு காஷ்மீரை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. தொடர்ந்து தீவிரவாதிகள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி வருவதை அடுத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதன் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை’ என்று ராணுவ அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்து இருக்கிறார். இதில் தீவிரவாதிகளோடு சேர்த்து இரண்டு பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 

இதுவரை 20 முறைக்கும் மேலாக இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் அவை தடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 18ம் தேதி உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தீடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. உரியில் தாக்குதல் நடத்திய அமைப்பினர் குறித்த தகவல்களை இந்தியா அளித்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.

உரி சம்பவத்தைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று மோடி அறிவித்து இருந்தார். இதன் எதிரொலியாக ஆப்கன், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளும் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்கிற காரணத்தையே அந்த நாடுகள் சொல்லியதால் தற்போது சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

 

 

மேலும் இதுகுறித்து பேசிய ராணுவ அதிகாரி ரன்பீர் சிங், ‘இந்த மாதிரியான தாக்குதல்களை தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. அதற்காக எல்லா தாக்குதல்களையும் இந்தியா ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். தேவைப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்தி, எதிரிகளை நிலைகுலைய வைக்க இந்தியாவால் முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

1999க்கு பிறகு வேறு ஒரு நாட்டின் எல்லையில் நமது ராணுவம் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் இது. இந்தியப்படைகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 3 கி.மீ., முன்னேறி இந்தத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. இதற்கு முன் 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்த்போது, இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே பிரதமர் வாயிலாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, எல்லையோர மாநிலங்களின் முதல்வர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

 

பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் 

 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ‘இந்தியா சொல்லி இருப்பதுபோல எந்த தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இல்லை. இந்திய ராணுவம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் எல்லையை அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. எல்லா தாக்குதலையும் எதிர்கொள்ள பாகிஸ்தானும் தயார் நிலையில் தான் இருக்கிறது’என்று கூறி இருக்கிறார்.


பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கை இந்தியா எல்லா நேரத்திலும் கண்டித்து வந்திருக்கிறது. ஆனால், உரி சம்பவம் இந்தியாவை மிகுந்த கோபம் அடையச் செய்து இருப்பதால் தான் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- சமரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close