Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாமானியர்களுக்கானதா சிறப்பு ரயில்கள்...? சங்கடப்படுத்தும் கட்டணம்!

சென்னையின் தனித்துப் போன வாழ்க்கையில் இருந்து விடுபட்டு பண்டிகை நாளுக்காக உறவினர்கள், நண்பர்களோடு கொண்டாட்டங்களில் ஈடுபட சொந்த ஊர்களுக்குப் பயணிப்பவர்கள் ஏராளம். இவர்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே பண்டிகைகாலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் வழக்கமான கட்டணத்துடன் கூடிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதை ரயில்வே நிறுத்திக் கொண்டது.

சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல விரும்புவோர், வழக்கமான ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே அனைத்து ரயில்களிலும், அனைத்து இருக்கைகளும் புக் செய்யப்பட்டு விடுகின்றன. பண்டிகைக்கொண்டாட்டத்தை முன்கூட்டியே திட்டமிடுவர்கள் பெரும்பாலோனோர் முன்பதிவில் முந்தி விடுகின்றனர்.
விடுமுறை கிடைப்பது, போனஸ் கிடைப்பது போன்ற காரணங்களால்  பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்புதான் பெரும்பாலானோர் திடீர் பயணங்களை மேற்கொள்கின்றனர். இத்தகைய பயணிகளைக் குறிவைத்துத்தான் ஆம்னி பேருந்துகள் செயல்படுகின்றன.  ஆனால், இப்போது தெற்கு ரயில்வேயும் இது போலக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கி விட்டது.
பண்டிகை காலங்களுக்காக சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள், சுவிதா சிறப்பு ரயில்கள் ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் மட்டும்தான் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் ஒரு பெட்டியில் இருக்கும் 100 இடங்களும், தலா 20 வீதம் 5 பிரிவாகப் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. முதல் 20 இடங்களுக்கு ஒரு கட்டணம், அடுத்த 20  இடங்களுக்கு இன்னும் அதிக கட்டணம். 80 முதல் 100 வரை உள்ள இடங்களுக்கு மிக, மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுவிதா  ரயில் அதிக நிலையங்களில் நிற்காது. சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.   
இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க கன்பர்ம் டிக்கெட் மட்டும்தான் பெறமுடியும். இதில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எதுவும் இல்லை. இந்த ரயில்களில் சாமானியர்கள் பயணிக்க முடியாது. எந்தவித முன்பதிவும் செய்யாமல் ஊருக்குக் கிளம்புபவர்கள் சாதாரண மக்கள்தான்.
வடமாநிலங்களில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில் விடுகின்றனர். இதில் உள்ள பெட்டிகள் எல்லாம் முன்பதிவு செய்யப்படாதவை. இது போன்ற ரயில்களை ஏன் தமிழகத்தில் விடுவதில்லை என்று தெரியவில்லை.

மொத்தமாக புக் செய்யும் முகவர்கள்

விழாக்காலங்களில் இருக்கும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு முகவர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். டிக்கெட் புக்கிங் செய்யும் அலுவலர்களைக் கையில் போட்டுக்கொண்டு சில முகவர்கள்  டிக்கெட்களை மொத்தமாக புக் செய்து விடுகிறார்கள்.
சில புக்கிங் கவுன்டர்களில், மதிய உணவு இடைவேளை என்று சொல்லி, கவுன்டர் முன்பு  CLOSED என்ற போர்டு வைத்துவிடுவார்கள். ஆனால், அந்த கவுண்டரில் இருக்கும் நபர்  கம்ப்யூட்டரில் மும்முரமாக டிக்கெட் புக்கிங் செய்து கொண்டிருப்பார். முகவர்களுக்கு இப்படித்தான் மொத்தமாக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்கிறார்கள்.


மாணவர்களை கொண்டு புக்கிங்  

அதிகாரிகள் கைவசம் இல்லாத  அல்லது அதிகாரிகளைத் தெரியாத சில முகவர்கள், கல்லூரி மாணவர்களிடம் தனித்தனியாக ஃபார்ம்களைக் கொடுத்து அனுப்பி மொத்தமாக டிக்கெட் புக்கிங் செய்து விடுகிறார்கள்.  இதுபோன்று அதிக அளவில் நடக்கிறது.
ஷீரடிக்கு  வாரம் தோறும் புதன் கிழமையன்று சென்ட்ரலில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு எப்போதுமே டிமான்ட் இருக்கிறது. இந்த ரயிலுக்காக சாமானியர்கள் யாரும் புக்கிங் செய்து விடமுடியாது. எப்போதுமே 4 மாதங்களுக்கு முன்பே பதிவாகி விடும். அதன்பிறகும் கூட ஏஜென்ட்கள் மட்டும் இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து விடுவார்கள்.


டிமாண்டை பயன்படுத்திக் கொள்ளை

தட்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் உதவித் தலைவர் இளங்கோவனிடம் பேசினோம்.
"சுவிதா ரயில், சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்களில் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதில் மூன்று மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர். விழாக்காலங்களில் பயணிகள் அதிக அளவுக்கு வெளியூர் செல்லும்போது டிமாண்ட் ஏற்படுகிறது. அதிகம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். வழக்கமாக விழாக்காலங்களில் டிமாண்டைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்காரர்கள்தான் கொள்ளையடிப்பார்கள். தென்னக ரயில்வே இப்படிச் செய்வது நல்லதல்ல.


தனியார் மயத்துக்கு முன்னோட்டமா?

ரயில் போக்குவரத்தில் விரைவில்  தனியார்களை அனுமதிக்கப் போகிறார்கள். அரசு,  தனியார் இரண்டு தரப்பிலும் ரயில்கள் இயக்கப்படும். ரயில் வளர்ச்சி ஆணையம்தான் கட்டணங்களைத் தீர்மானிக்கப்போகிறது. செலவு, லாபம் இரண்டையும் கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்போகிறார்கள்.
அரசு ரயிலிலேயே கட்டணம் அதிகமாக இருக்கும்போது, தனியார் ரயில்களில் கட்டணம் அதிகம் இருப்பதற்கு  யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் இப்போது சிறப்பு ரயில்கள் என்ற பெயர்களில் கட்டணக் கொள்ளை நடக்கிறது" என்றார்.

- கே.பாலசுப்பிரமணி  

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ