Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மேதகு’ இல்லை.. இனிமேல் ’மாண்புமிகு ’ஆளுநர் - இந்த அறிவிப்பு எதற்காக ?

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ‘‘தன்னை, இனி ‘மேதகு’ என்று அழைக்கவேண்டியதில்லை. ‘மாண்புமிகு’ என்று அழைத்தால் போதும்’’ அறிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் ”மேதகு ஆளுநர்’’ என்பதற்குப் பதிலாக, ‘மாண்புமிகு ஆளுநர்’ எனப் பயன்படுத்துமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருப்பதாக அவரின் செயலாளர் மீனா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘தற்போது வழக்கத்திலுள்ள ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். அதேநேரத்தில், வெளிநாட்டினருடனான கலந்துரையாடலின்போது ஆளுநரை, ‘மேதகு ஆளுநர்’ என அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எதற்காக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்? மேதகுவுக்கும், மாண்புமிகுவுக்கும் என்ன வித்தியாசம்? இதுகுறித்து சட்டத்துறை நிபுணர்களிடம் பேசினோம்.

மூத்த வழக்கறிஞர் விஜயன், “இது அரசியல் அமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. இந்த மாற்றத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ‘ரோஜாவை வேறு எந்தப் பெயரில் அழைத்தாலும் அது ரோஜாதான்’ என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். சாதாரண பொதுமக்களுக்கு கவர்னர், ஆளுநர் என்றுதான் தெரியும். இதைப் பெரிய மாற்றமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்றார். 

‘‘தமிழகத்துக்கு தற்போது முழுநேர கவர்னர்தான் தேவை!’’

முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், “மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதியையும், ஆளுநரையும் ‘மேதகு’ என்று அழைப்பதற்குப் பதிலாக ‘மாண்புமிகு’ என்றே அழைக்கலாம் என்று ஏற்கெனவே முடிவெடித்து உள்ளது. அந்த அடிப்படையில்தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘தன்னை மாண்புமிகு என்று அழைத்தால் போதும்’ என்று கேட்டுக்கொண்டார். அதன் வழியாகத்தான் இப்போது தமிழக பொறுப்பு ஆளுநரும், ‘தன்னை மேதகு என்று அழைக்கவேண்டாம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் பெயர் மாற்றத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று சென்னை. இதற்குரிய முக்கியதுவத்தை மத்திய அரசு தரவேண்டும். இங்கு இப்போது உள்ள சூழ்நிலையில் கவர்னருடைய பணிகள் மிக முக்கியதுவம் வாய்ந்ததாகக் கவனிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு மேலாக முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். எல்லாக் கண்களும் கவர்னரை நோக்கியே இருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்துக்கும் கவர்னர் பதில் சொல்லி ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார். அதில்தான் அதிக அக்கறை எடுக்கவேண்டும். 

மிகப்பெரிய மாநிலமான மஹாராஷ்டிர கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழகத்தைக் கூடுதல் பொறுப்பாகத்தான் கவனித்து வருகிறார். சென்னைக்கு அவ்வப்போது வந்துசெல்லும் நிலையைவிட,  உடனடியாகத் தமிழகத்துக்கு முழு நேர கவர்னர் ஒருவரை மத்திய அரசு நியமிக்க வேணடும். இதுதான் இப்போது தேவை. அதைவிடுத்து பெயர்களை மாற்றுவதால், ஆட்சி நிர்வாகத்துக்கு எந்த வகையிலும் பயன்தராது” என்றார்.

‘‘இது மனிதநேயத்தின் வெளிப்பாடு’’

மூத்த வழக்கறிஞர் விடுதலை, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தில், ‘மேதகு’, ‘மாண்புமிகு’ என்ற பதங்கள் எல்லாம் இல்லை. இது நாம் வைத்துக்கொன்டதுதான். முன்பெல்லாம், ‘கனம் பொருந்திய’ என்றுதான் ஆட்சியாளர்களை அழைத்தார்கள். ஜனநாயகத்தின் நீட்சியாக அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது. மக்கள் பிரதிநிதிகளை, ‘மாண்புமிகு’ என்று அழைக்கும் பழக்கம் இப்போது வந்துவிட்டது. இது, ஜனநாயகத்தில், மக்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்பை எளிமையாக்கியதன் வெளிப்பாடு என்றுதான் பார்க்க வேண்டும். தமிழக ஆளுநர், தன்னை, ‘மேதகு’ என்று அழைப்பதற்குப் பதில், ‘மாண்புமிகு’ என்று அழைத்தால் போதும் என்று கூறுவது அவர் தன் நிலையைக் குறைத்து மக்களோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நடைமுறையை ஜனநாயகத்தின் ஆரோக்கியமாகத்தான் பார்க்க வேண்டும். இது மனிதநேயத்தின் வெளிப்பாடு’’ என்றார்.

மக்கள் பிரதிநிதியின் பணிகளைச் செய்ய ஆசைப்படுகிறாரோ ஆளுநர்?

- எஸ்.முத்துகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ