Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றும் இயங்கவில்லை ஏ.டி.எம்.-கள்... தொடரும் 'பணச்சிக்கல்'?!

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, உடனடியாக அது அமலுக்கு வருவதாக கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியாக கூறியது. '9-ம் தேதி வங்கிகள் இருக்காது. 9,10 தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் இருக்காது' என்ற மத்திய அரசின் அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏ.டி.எம். மையங்கள் இயங்காத இந்த இரு தினங்களில் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் என்ன செய்வது என தெரியாமல் பொதுமக்கள் பரிதாப சுற்றித்திரிந்தனர். மிகப்பெரும்பாலான கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படவில்லை. இரு தினங்களுக்கு பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்த்த பொதுமக்கள், இரு தினங்களாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படாததால் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

பெரும்பாலான ஏ.டி.எம்.கள் இன்றும் காலியாகவே இருந்தன. ஏ.டி.எம். மையங்களில் நேற்றே பணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏ.டி.எம். மையங்களில் பணம் தேவைக்கேற்ப நிரப்பப்படவில்லை. ஒரு ஏ.டி.எம். மையங்களில் சொற்பமான அளவு பணமே நிரப்பப்பட்டதால், ஓரிரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து போனது. நேற்று மதியத்துக்கு பின்னர் தமிழகம் முழுவதும் மிகப்பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் காலியாகவே இருந்தது. இந்த நிலை இன்று காலை வரை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அல்லலுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் பேசினோம். "ஏ.டி.எம். இயந்திரத்தில் குறைவான அளவு தொகையை தான் நிரப்ப முடிகிறது. 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே இயந்திரத்தில் நிரப்ப முடியும் என்பதால் 2 முதல் 2.50 லட்சம் வரை தான் நிரப்ப முடியும். இது ஓரிரு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. அதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் நிரப்புவதற்கான தொழில்நுட்பங்கள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை.

நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் 80 முதல் 85 சதவீதம் வரையிலான ரூபாய் நோட்டுகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான். வெறும் 15 சதவீதம் தான் 100 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் மதிப்பில் உள்ள நோட்டுகள். அதனால் இந்த நோட்டுகளை வைத்துக்கொண்டு மக்களின் முழு தேவையை நிறைவு செய்வது என்பதில் சிக்கல் உள்ளதை மறுக்க முடியாது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருந்தால் இந்த பாதிப்புகள் வந்திருக்காது. தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் அதிகளவில் பணத்தை நிரப்பியிருந்தாலும் இந்த சிக்கலை தவிர்த்திருக்கலாம். ஆனால் இதற்கான முன்னேற்பாடுகளை செய்யத்தவறியது தான் சிக்கலுக்கு காரணம். ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்காமல் நிலவும் சிக்கல் இன்று மட்டுமல்ல. இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை," என்றனர்.

100 ரூபாய் நோட்டுகளுக்காக வங்கியில் கால் கடுக்க காத்திருக்கிறார்கள். 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அனைவருக்கும் 100 ரூபாய் நோட்டு கொடுப்பதில்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தான் வங்கி அதிகாரிகள் வழங்குகிறார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளைக்கொண்டு தவித்தவர்கள், இப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி காட்சிப்பொருளாக பிறரிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து நீங்கள் ஏதாவது வணிக நிறுவனங்களுக்கு சென்றால், நீங்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கும் பொருளை வாங்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் உங்களுக்கு சில்லறை கிடைக்காது அல்லது பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் உங்களிடத்தில் வரும்.

ஓரிரு நாள் தான் சிக்கல் இருக்கும் என எண்ணியிருந்த பொதுமக்கள் இப்போது வாரக்கணக்கில் இப்பிரச்னை நீளக்கூடும் என்பது என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை. ஏ.டி.எம். இயந்திரங்களில் உடனுக்குடன் பணத்தை நிரப்பவில்லை. பிரச்னையை பெருமளவு தீர்க்கும் 500 ரூபாய் நோட்டுகளை இன்னும் அமலக்காவில்லை என சாமானிய மக்களை மிகப்பெரிய பாதிப்பில் தள்ளி இருக்கிறது இந்த அறிவிப்பு.

இன்னும் எத்தனை நாள் தொடரப்போகிறதோ இந்த தொல்லைகள்..

- ச.ஜெ.ரவி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ