Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘வங்கிகள், ஏ.டி.எம் வாசல்களில் காத்திருக்கும் மக்களுக்கு உதவ விருப்பமா...?- வாருங்கள் கரம் கோர்ப்போம்’ #ChennaiTricolor #CurrencySwitch #IdhuNammaChennai

 

 வங்கி

னி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வந்து இன்றோடு 6 நாட்கள் ஆகிவிட்டன. நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வசதிகள் கொண்ட... அதைப் பயன்படுத்த தெரிந்தவர்கள், இந்தச் சூழலை எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இவர்கள், இந்திய மக்கள்தொகையில் வெறும் 20 சதவிகிதம்தான். ஆனால், இதுகுறித்து எதுவும் தெரியாமல், எல்லாப் பரிமாற்றங்களுக்கும் பணத்தை, நேரடியாக வங்கி செயல்பாடுகளை மட்டுமே நம்பி இருக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். 

வாருங்கள்...  இவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். சென்ற ஆண்டு பெரும் மழையின்போது கரம்கோத்த நாம், இந்த ஆண்டு இந்தச் சூழலை கையாள கரம்கோப்போம்..!

ஆம். ஏ.டி.எம்-களில், வங்கிகளில், தபால் அலுவலகங்களில் நீண்ட வரிசைகளில் படிக்காத பாமர மக்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது என்று தெரியாது. வாருங்கள்... அவர்களுக்கு உதவி செய்வோம். 

வங்கிக்கு, பணம் எடுக்கும் மையங்களுக்கு வரும் கூட்டத்தை ஒருங்கிணைக்க நிச்சயம் காவலர்களால் மட்டும் முடியாது. அதற்கு அதிக அளவிலான தன்னார்வலர்கள் தேவை. வாருங்கள் ஒருங்கிணைப்போம்.

நான் ஆர்வமாக இருக்கிறேன்... எப்படி,  யாரை தொடர்பு கொள்வது என்கிறீர்களா...? 

நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளுகிறோம். நீங்கள் கீழே உள்ள  இணைப்பை கிளிக் செய்து, விண்ணப்பத்தை நிரப்பினால் போதும்...!

 

 

 

 

வாருங்கள் கரம் கோர்ப்போம்... இக்கட்டான சூழலில் எளிய மக்களுக்காக நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.

எடிட்டர் சாய்ஸ்