Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மா உணவகத்திற்கு உதவிய பிரதமர் மோடி !

அம்மா உணவகம்

பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால்,  தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் மலிவு விலை உணவகங்களான அம்மா உணவகங்களில் கடந்த சில நாட்களில் விற்பனை பெருமளவு உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி, கடந்த 8-ம் தேதி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி வெளியிட்ட அறிவிப்பால், நாடே அல்லோல கல்லோலப் பட்டுள்ளது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றுக்குப் பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்ததுதான்.

மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் குவிந்து தங்களது அன்றாடத் தேவைகளுக்காக பணத்தை மாற்றி வருகிறார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களை நவம்பர் 10-ம் தேதிக்குப் பின்னர் நடத்தியவர்களின் நிலைமை இன்றும் மோசம். தொடர்ந்து, அடுத்த மாதம் வரை திருமணம் நடத்துவோர் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கக் கூடியது.

மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த அல்லது இப்போதும் வைத்துக் கொண்டுள்ள  500, 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு எங்கும் செல்ல முடியாத நிலையில், அவர்கள் பட்ட சிரமம் சொல்லி மாளாது. ஹோட்டல், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடை என எல்லா வர்த்தகமும் பெருமளவு பாதிப்புக்குள்ளானது.

இந்த சூழ்நிலையில்தான், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்படும் தமிழக அரசின் மலிவு விலை உணவகமான அம்மா உணவகங்களில், சத்தமில்லாமல் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. இப்போது சொல்லுங்கள், அம்மா உணவகங்களுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக உதவியுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினர் பெரும்பாலும் அம்மா உணவகங்களில் சாப்பிடுவதை விடவும், சற்றே விலை அதிகமான ஹோட்டல்களை நாடிச் செல்வர். ஆனால், அதுபோன்ற ஹோட்டல்களுக்குச் சென்றால் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளைத் தான் கொடுத்தாக வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளும் ஹோட்டல்கள் என்றால், பரவாயில்லை.  கார்டுகளைப் பெற்றுக் கொள்ளாத ஹோட்டல்களுக்குச் செல்வதை விடவும் அதுபோன்ற நிலையில் உள்ளோர், சென்னை போன்ற நகரங்களில் செயல்படும் குறைந்த  செலவில், சீப் அண்ட் பெஸ்ட் உணவை வழங்கக்கூடிய அம்மா உணவகங்களை நாடிச் சென்றுள்ளனர். ஒரு நபர் அதிகபட்சம் 10 ரூபாய்க்குள் சாப்பிட்டு விடலாம். 3 நபர் சென்றாலும் 500 ரூபாய் நோட்டுகளை எல்லாம் மாற்ற வேண்டிய அவசியம் அம்மா உணவகங்களில் கிடையாது என்பதால், அந்த உணவகங்களில்  கடந்த 10 நாட்களில் மிக அதிக அளவு விற்பனை நடைபெற்றுள்ளதாக ஆதாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள சுமார்  407 அம்மா உணவகங்களில் கடந்த சில தினங்களில் மட்டும் வழக்கமான விற்பனையை விட 10 சதவீதம் அதிகம் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மா உணவகங்களில் அதிகளவு உணவு விற்பனை நடைபெற்றுள்ளது.ஆனால், வாடிக்கையாளர் வருகையைப் பொறுத்தவரை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மோடி அறிவிப்பிற்குப் பின் அம்மா உணவகம்நவம்பர் முதல் வாரத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் 39 லட்சத்து 88 ஆயிரம் இட்லி விற்பனையாகி உள்ளது.பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, நவம்பர் இரண்டாவது வாரத்தில் 40 லட்சத்து 33 ஆயிரம் இட்லி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தயிர் சாதம் எண்ணிக்கை 7 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து, 7 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது.இரவு நேரத்தில் அம்மா உணவகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் சப்பாத்தியின் எண்ணிகை சுமார் 10 லட்சம் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையின் முக்கிய போக்குவரத்துப் பகுதியான சென்ட்ரல், எழும்பூர் அருகேயுள்ள அம்மா உணவகங்களில் அன்றாடம் வந்து செல்வோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வை எதிர்கொண்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்மா உணவகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், சிலர் 500 ரூபாய் வைத்திருந்ததால், அவர்களுக்கு பணமின்றி உணவு வழங்க இயலாமல் போன நிகழ்வுகளும் உண்டு என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சிலர்  வங்கிகளில் பெறப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அம்மா உணவகங்களில் கொடுத்து மாற்ற முயன்ற போதிலும், அவர்களுக்கு உணவோ, சில்லறையோ  கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

தனியார் ஹோட்டல்களைப் பொறுத்தவரை 1,500 ரூபாய்க்கு உணவு சாப்பிட்டால் தான், புதிய 2,000 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து மீதி சில்லறை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

எப்படியோ, மோடியின் அறிவிப்பால் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியும் பல கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஆகியுள்ளது. மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் கூடுதல் விற்பனை மூலமும் மோடி, தமிழக அரசுக்கு உதவியுள்ளார்.

-சி. வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close