Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள்

மக்கள் நலக் கூட்டணி

க்கள் நலக்கூட்டணி முடிந்துவிட்டது என்று  அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் பேசி வரும் நிலையில் அதில் உள்ள தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோர் அவ்வப்போது தோன்றி கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி அதில் உள்ள  நால்வரைத்தான்  நீங்கள் கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தா.பாண்டியனிடம்,  மக்கள் நலக் கூட்டணியின் இப்போதைய நிலைகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரிடம்தான் கேட்கவேண்டும்" என்றார். "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அந்த அணியில் உள்ளாரே" என மீண்டும் கேள்வி எழுப்பியபோது  "மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகளில் தொடக்கத்தில் இருந்தே நான் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டணி உள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது" என  பதிலளித்தார் தா.பாண்டியன்.

தா .பாண்டியனின் சொந்த கருத்து  !

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி .ராமகிருஷ்ணன், "புதுச்சேரியில் டிசம்பர் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மக்கள் நலக் கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்தக் கருத்து"  என்று கூறியுள்ளார்.

சரியாகத்தான் சொல்கிறார் " தா பா" திருமாவளவன்  !

இது குறித்து முத்தரசனிடம் பேசுவதற்காக அவரை தொடர்பு கொண்டபோது, அவருடைய தொலைபேசி சுவிட்ச்  ஆப் ஆகியிருந்தது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல்.திருமாவளனிடம் பேசினோம். "அவர் சரியாகத்தான் கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் தலைவர் யாரோ அவர்களிடம் கேளுங்கள் என்று கூறியிருப்பது சரியானதுதான். மக்கள் நலக்கூட்டணியில் இயங்கக்கூடிய தலைவர்களின் விஷயங்களில் நாம் தலையிடக் கூடாது என்ற அவருடைய கருத்து  ஜனநாயகப் பண்பைக் காட்டுகிறது.மக்கள் நலக்கூட்டணி குறித்து கருத்துச் சொல்வதற்கு அந்தக் கூட்டணியின் தலைவர்களுக்குதான் அதிகாரம் உள்ளது. அது தொடர்பாக நாம் கருத்துச்சொல்வது என்பது அவர்களுடைய  அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாகும் என்று எண்ணியிருப்பார் .

மக்கள் நலக்கூட்டணி நல்லநிலையில் உயிர்ப்போடுதான் உள்ளது.வரும் டிசம்பர் ஆறாம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் அனைத்து தலைவர்களும் பங்கேற்றுப் பேச உள்ளார்கள். தா.பாண்டியன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாகத் தேவைப்பட்டால்  நான்கு தலைவர்களும் கலந்து ஆலோசிப்போம்" என்றார்

கடைவிரித்தேன் கொள்வாரில்லை !

 இதுகுறித்து அரசியல் விமர்சகர் மணியிடம் கேட்டோம். "தா.பாண்டியன்  அ.தி.மு.க-வின் ஆதரவாளர் .அவருடைய பிறந்தநாள் அன்று ஜெயலலிதாவே நேரில் போய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவே யாரையாவது நேரில் போய் சந்தித்துப் பேசியுள்ளாரா ?அந்த அளவுக்கு தா.பா அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக உள்ளதே காரணம்.இந்தப் பின்புலத்தில் இருந்து பார்த்தோமானால் மக்கள் நலக்கூட்டணியின்  செல்லவாக்கு எடுபடாது என்ற நிலை தா. பாண்டியனுக்கு தெரிந்துள்ளது. திருமாவளவனும் அந்தப் பக்கம் போக ஆரம்பித்துவிட்டார் .எனவே அந்த அர்த்ததில்தான் அவர் இதனைச் சொல்லி இருக்க வேண்டும். அ.தி.மு.க  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதால்தான் மக்கள் நலக்கூட்டணியே உதயமானது.எனவே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்ற நிலை ஆகிவிட்டது. மக்கள் நலக்கூட்டணியின் ஆயுள் முடிந்து விட்டது என்பதைத்தான் தா பாண்டியனின் பேச்சு உணர்த்துகிறது " என்றார்

- கே .புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ