Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அன்னமே, ரஞ்சிதமே...!’ தோழர் நல்லக்கண்ணுவின் முற்றுப்பெற்ற கவிதை!

ரஞ்சிதம் அம்மாள்

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக இன்றுகாலை 10.20 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. குறைந்த ரத்த அழுத்தம், அல்சர் போன்ற நோய்களுக்காக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ரஞ்சிதம் அம்மாள் இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கம்யூனிச குடும்பத்தில் இருந்து வந்தவர் !

ஸ்ரீ வைகுண்டம் அருகே ஏ.கே அண்ணாசாமி - சந்தோசியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர் ரஞ்சிதம் அம்மாள். மருதன் வாழ்வூரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்க மறுத்தபோது, தலித் மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் கடையை திறந்து, பொருட்களை வழங்கியவர் அவருடைய தந்தை அண்ணாசாமி. அவரிடம் கம்யூனிச கொள்கை பரவிக் கிடந்தது. அத்தகைய குடும்பத்தில் இருந்து வந்தவர் ! ஆசிரியர் பணியை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தொடங்கினார் ரஞ்சிதம் அம்மாள்.

 

இந்த நிலையில் கட்சிப்பணி காரணமாக நல்லகண்ணு ஒருமுறை சிறையில் இருந்தபோது 'அன்னமே, ரஞ்சிதமே’ என்று எதார்த்தமாக கவிதை எழுதி இருக்கிறார்.அந்த கவிதையாக அவரை கரம் பிடித்தவர்தான் ரஞ்சிதம் அம்மாள்.அம்மையாரை அவர் வீட்டில் செல்லமாக அழைப்பதும் 'அன்னம்’ என்றுதான். இதனை தனக்கு நெருங்கி பழகியவர்களுடன் நான் எழுதிய கவிதை போன்று மனைவியும் அமைந்து விட்டார் என்று புகழ்வாராம் .

 கட்சிப்பணி, பொதுமக்களுக்கான போராட்டம் என தனது கணவர் களத்துக்கு சென்ற போதெல்லாம் அவருக்கு உறுதுணையாக நின்றவர். கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலத்தில், தலைமறைவு வாழ்க்கையை நல்லகண்ணு மேற்கொண்டபோதும், சற்றும் கலங்காமல் அவருக்கும், அவருடன் இருந்த தோழர்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்தார். அதுமட்டுமின்றி, தலைமறைவாக இருந்த தோழர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைச் சந்தித்து, அவர்களுக்கு தைரியம் சொல்வதோடு, உதவிகளையும் செய்தார். நல்லகண்ணு போராட்டக் களத்தில் இருந்ததால், தனது இரண்டு மகள்களையும் வளர்க்கும் பொறுப்பான தாயாகவும், சிறந்த ஆசிரியையாகவும் செவ்வனே பணியாற்றியவர்.

நல்லகண்ணுவின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர் !

எந்தவொரு நெருக்கடியான காலத்திலும் முகத்தில் புன்னகையை அவர் தவறவிட்டதே இல்லை. மிகவும் தைரியமான பெண்மணியாக இருந்தவர் ரஞ்சிதம் அம்மாள். குடும்ப நிர்வாகத்தை தனியாளாக இருந்து கவனித்துக் கொண்டவர். புத்தகங்கள் வாசிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டு, தொடர்ந்து பல்வேறு புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 'ஆனந்த விகடன்' இதழை தவறாமல் படிக்கும் பழக்கத்தை கொண்டவர். கம்யூனிச கொள்கையையும், குடும்பத்தையும் ஒன்றாக எண்ணியவர். போராட்ட காலத்தில், நல்லகண்ணுவுக்கு நாட்டு நடப்புகளையும், செய்திகளையும் தவறாமல் சொல்வார் . நல்லகண்ணு பற்றி வரும் தகவல்களை ஒன்று விடாமல் சேகரித்து, அவரிடம் சேர்த்து விடுவார்.அவரைப் பற்றிய துண்டுசெய்திகள் ஆனாலும், அவற்றை எல்லாம் சேகரித்து புத்தகமாக மாற்றி அவரிடம் கொடுப்பார். சில நேரங்களில் தனது கணவருக்கு அரசியல் ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். நல்லகண்ணுவின் முதுகெலும்பாக திகழ்ந்தவர் . மனைவியை இழந்து வாடும் ஐயா நல்லகண்ணுவுக்கு, ரஞ்சிதம்மாள் அனைவர் மீதும் கொண்டிருந்த மகத்தான அன்பும், அக்கறையுமே என்றென்றும் அருமருந்தாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

-கே. புவனேஸ்வரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close