Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''தமிழக நிதிநிலைமை மிகவும் மோசம்!'' - பி.டி.ஆர்.பி.தியாகராஜன்

பிடிஆர்பி தியாகராஜன்

ன்று (16-3-17) தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலாகியுள்ள நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் வெளியிட்டுள்ள தமிழக நிதி நிலைமை பற்றிய ஆய்வறிக்கை பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் மிகவும் வித்தியாசமானவர் பி.டி.ஆர்‌.பி.தியாகராஜன். முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆரின் மகனான இவர், பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தவரைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று தி.மு.க தலைவர் கருணாநிதியும், செயல் தலைவர் ஸ்டாலினும் கேட்டுக்கொண்டதால் பலகோடி ரூபாய் வருமானத்தை உதறிவிட்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் போட்டியிட்டபோதே மக்களை வித்தியாசமாக அணுகினார். மிகவும் நாகரிகமான முறையில் அரசியல் செய்துவரும் பி.டி.ஆர்‌.பி.தியாகராஜன், மதுரைக்கு வந்தால் தொகுதியில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வருகிறார். வெளிநாட்டில் இருந்ததால், தமிழைவிட ஆங்கிலம் தனக்குச் சரளமாக வரும் என்று கூறி, சட்டசபையில் சிறப்பாகப் பேசி... ஜெயலலிதாவையே வியக்கவைத்தார். தொகுதி முழுவதும் புகார் பெட்டிகளை வைத்து, அதைத் தினமும் கலெக்ட் செய்து மக்களின் குறைகளை நிவர்த்திசெய்து வருகிறார். தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து பொதுமக்களிடம் தினமும் புகார்களை வாங்கி, அதற்குத் தீர்வை ஏற்படுத்துகிறார். இதுபோன்ற இவருடைய நடவடிக்கைகள், சொந்தக் கட்சிக்காரர்களையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இவருடைய நடவடிக்கைகள், ஆற்றல், நிபுணத்துவம் போன்றவை மு.க.ஸ்டாலினை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால்தான் தற்போதைய தமிழக அரசின் மோசமான நிதிநிலை குறித்த ஆய்வறிக்கையைத் தயாரிக்க இவரைப் பணித்துள்ளார். இன்று, தமிழக அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக அரசு வெளியிட்ட துணை நிலை நிதி அறிக்கையை அடிப்படையாக வைத்து இதைத் தயாரித்துள்ளார். தமிழக6த்தின் கடந்தகால நிதிநிலைமை, தற்போதைய வரவுசெலவு, தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் தரவுகளையும் பெற்று அனைத்தையும் அலசி ஆராய்ந்து மிகவும் துல்லியமாகத் தயாரித்துள்ளார். அத்துடன், அதை அறிக்கையாக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காணொலியாகவும் வெளியிட்டுள்ளார்.

ஐந்து தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், ''அ.தி.மு.க அரசு... கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதிநிலைமையை மிகவும் மோசமாக்கி உள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ''நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், வரவு மெதுவாகவும் செலவு வேகமாகவும் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்புக்குப் பிறகும் நிர்ணயிக்கப்பட்ட இருபது சதவிகித வளர்ச்சியை அடைய மாநிலம் தவறிவிட்டது. வணிகவரி வசூலில் வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இந்த வருடம் அதிகமான அளவில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க அறிவித்த தொலைநோக்குத் திட்டம் 2023 ஒரு மாயை. இந்த நிலை இப்படியே சென்றால், முதலீடு பெறுவதில் ஐம்பது சதவிகிதத்தைக்கூட எட்ட முடியாது. தி.மு.க ஆட்சியில் உபரி வருவாய் இருந்தது'' எனப் பல்வேறு புள்ளிவிபரங்களை அதில் இணைத்துள்ளார்.

செயல் தலைவர் சொன்னதைச் செம்மையாய் செய்து... அவரது கவனத்தை ஈர்த்துவிட்டார், பி.டி.ஆர்‌.பி.தியாகராஜன்.

- செ.சல்மான்

படம்: வீ.சதீஷ்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close