Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூரிய கிரகணத்தை கண்களுக்கு பாதிப்பில்லாமல் பார்ப்பது எப்படி? #SolarEclipse

சூரிய கிரகணத்தை

சூரிய கிரகணம் என்பது  இயற்கை நிகழ்த்தும் அறிவியல் அற்புதம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் சந்திரன் வரும் பொழுது இது நிகழும். பூமியில் இருந்து பார்த்தால் சந்திரன், சூரியனின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ மறைக்கும். இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறார்கள். என்னதான் இயற்கையின் அற்புதமாக இருந்தாலும் இதை சாதாரணமாக கண்களால் பார்க்க இயலாது. அப்படி பார்த்தால் கண்கள்  பாதிக்கப்பட வாய்ப்புண்டு. ஒரு சில நொடிகளே நீடிக்கும் அந்த அற்புதத் தருணத்தை பாதுகாப்பாக காண்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. இதை பயன்படுத்தி கண்களுக்கு பாதிப்பின்றி சூரிய கிரகணத்தை நம்மால் பார்க்க இயலும்

கண்ணாடிகள்

சாதாரண கண்ணாடிகளால் பார்த்தால் கண்களில் உள்ள ரெட்டினா பாதிக்கப்படைந்து நிரந்தர பார்வையிழப்பு ஏற்படலாம்.
சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கென தனியே கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பு பூச்சுக்கள் சூரியனிலிருந்து வரும் அதிகப்படியான வெளிச்சத்தை முழுவதுமாக தடுத்து விடும். இதனால் நம்மால் பாதிப்பின்றி கிரகணத்தை கான முடியும். ஆனால் போலியான கண்ணாடிகள் அதிகம் இருப்பதால் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு கண்ணாடியை பல முறை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

தொலைநோக்கிகள்

சூரிய கிரகண கண்ணாடிகளை போலவே தொலைநோக்கிகளும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்தினால் மிக தெளிவாக கிரகணத்தைப் பார்க்கலாம். ஆனால் சற்று விலை அதிகம் இருக்கும் என்பதால் அனைவருக்கும் சாத்தியமில்லை.
எனவே கீழே குறிப்பிட்டப்பட்டுள்ள மற்ற வழிமுறைகளை பின்பற்றலாம்.

Pinhole projector

இருப்பதிலேயே எளிதான முறைகளில் ஒன்று. சில நொடிகளில் தயார் செய்து விடலாம் ஒரு அட்டையில் சிறு துளையை ஏற்படுத்தி தரையிலோ அல்லது வெள்ளை காகிதத்தின் சற்று மேலோ பிடித்தால் சூரிய கிரகண நிகழ்வு அப்படியே அதில் தெரியும்.
மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சூரியன் ஒளியின் ஆதாரமாக இருப்பதால் பூமியில் ஏற்படும் நிழல்கள் அனைத்தும் சூரிய கிரகணத்தை அப்படியே  பிரதிபலிக்கும்.

Mirror projector

சிறு வயதில்  கண்ணாடியை பயண்படுத்தி சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் பிலிமை வைத்து படம் ஓட வைத்து விளையாடுவோமே... அதே போன்றது தான் இந்த முறையும். இதில் ஒரு சிறு அட்டைப்பெட்டியில் துளையை ஏற்படுத்தி அதில் கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்கும் ஒளி செல்லுமாறு வைத்தால் போதுமானது. அந்தப் பெட்டிக்கு முன்னால் ஒரு வெள்ளை காகிதத்தை நீட்டினால் சூரிய கிரகணத்தை வீட்டிற்குள்ளேயே பார்க்கலாம்.

அறிவியல் மையங்கள்

அருகில் இருக்கும் அறிவியல் மையங்களுக்கு சென்றால் இது போன்ற நிகழ்வை காண்பதற்காக   சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். குழந்தைகளை அறிவியல் மையத்திற்கு அழைத்து செல்வதால் அங்கே சூரிய கிரகணத்தை பற்றிய முழு விவரத்தையும் அறிவியல் பூர்வமாக அவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தலாம். இல்லையெனில் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு வழியை பயன்படுத்தி பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை காணலாம்.

சூரிய கிரகணத்தின் பொழுது வெளியே செல்லக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியது மூடநம்பிக்கையாக கருதப்பட்டாலும் வெளியே சென்று சூரியனை தவறுதலாக பார்த்துவிட்டால் கூட கண் பார்வை பாதிக்கப்படலாம் என்பதற்காகவே அவர்கள் அப்படி கூறியிருக்கலாம்.

ஆனால் தற்பொழுது பலருக்கும் இதன் பின்னால் உள்ள அறிவியல் புரிந்து விட்டதால் பயமின்றி சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்க்கின்றனர் மேலும் இதைப்போல வானியல் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களிடம் அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.

ஆனால், இப்பொழுது நீங்களே விரும்பினாலும் கிரகணத்தை பார்க்க 2019 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் சூரிய கிரகணங்களில் சிறப்பானதாக கருதப்படும் முழு சூரிய கிரகணத்தை தமிழகத்தில் பார்க்க முடியும். சூரிய கிரகணம் இல்லையென்றால் என்ன சந்திர கிரகணம் இருக்கிறதே.. அடுத்த சந்திர கிரகணம் வரும் ஆகஸ்ட் 7 தேதி நிகழும். இது பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் இதை சாதாரண கண்களால் பார்க்கலாம். அதுவும் இரவில் என்பதால் சாப்பிட்டுவிட்டு ரிலாக்ஸாக அந்த அற்புத நிகழ்வை காணலாம். அதை மிஸ் பன்னாதீங்க அப்புறம் வருத்தப்படாதீங்க!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close