Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேளாண்மை பட்டப்படிப்புக்கு ஆர்வம் காட்டும் மாணவர்கள்... நீட் தேர்வு காரணமா?

வேளாண்

"இந்தியாவின் முதுகெலும்பே விவசாயமும், விவசாயிகளும்தான்" இது மகாத்மா காந்தி சொன்னது. ஆனால் இந்த வரிகள் தற்போதுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கும், விவசாய சூழ்நிலைக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று தெரியவில்லை. 1940க்கு இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் 2040ல் இப்படி சொல்ல முடியுமா? எதிர்கால ‘பயத்தை’ மறந்து நிகழ்கால நிதர்சனத்துக்கு வருவோம். விவசாயம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டாலும் வேளாண்மை  படிப்பு என்று கூறும்போது விவசாயப் படிப்புகள் பரந்து விரிந்ததாக உள்ளன. கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல வகையான வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. இதில் அதிக முக்கியத்துவமும், முதன்மைத்துவமும் வாய்ந்த படிப்பாக இளமறிவியல் வேளாண்மை (B.Sc.,Agri) பட்டப்படிப்பு உள்ளது. பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கு நிகராக எல்லாக் காலத்திலும் வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு மவுசு கூடிக்கொண்டே தான் வருகிறது. 

படிப்பை முடித்தவுடன் வேலை கிடைப்பதால் இதன் மீது மாணவர்களின் ஆர்வம், பெற்றோர்களின் ஆசையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற நாட்டின் முதன்மைப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் வேளாண் பட்டப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் வருகிறார்கள். வங்கித் தேர்வுகளிலும் நிறைய  வேளாண் அதிகாரியாக (Agricultural Field Officer) தேர்ச்சி பெற்று வங்கிகளில் பணிபுரிகின்றனர்.  போட்டித் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு முதன்மையாகவே இருந்து வருகிறது.அதுமட்டும் அல்லாமல் மருத்துவப் படிப்புக்கு நடைபெற்ற அகில இந்திய அளவிலான நீட் தேர்வின் தாக்கத்தால் வேளாண் படிப்புகளுக்கு முக்கியத்துவம் இந்த ஆண்டு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர். ப. சிவசக்திவேலன் கூறியதாவது:

சிவசக்திவேலன்தற்போது நீட் தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கு  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ் வழியில் +2 படித்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்கும்  நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவே கூறுகின்றனர். இதற்கு காரணம் நம் மாநில அரசின் பாடத்திட்டம் மத்திய அரசின் கல்வி முறையான (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்துக்கு இணையாக இல்லை, இதன் காரணமாக நீட் தேர்வு முடிவுகளில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பல மாணவர்களுக்கு மருத்துவ கல்வி சாதமாக இருக்க வாய்ப்பில்லை. இந்தக் காரணத்தால் வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போட்டி அதிகமாகவே இருக்கும். தமிழகத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கீகாரம் பெற்ற தனியார் வேளாண்மைக் கல்லூரிகளிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்திலும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பயில ஒவ்வொரு பல்கலைக்கும் தனித்தனியாக அந்தந்த பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் வேளாண் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளனவா என்று நேரில் சென்று பார்த்து சேர்ப்பது நலம்.

வருங்காலத்தை பொறுத்தவரையில் வேளாண் பட்டப்படிப்பை படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. விதை நிறுவனங்கள், பூச்சிமருந்து நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள் என தனியார் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அரசு துறைகளில் விதை சான்று அதிகாரிப் பணி, வேளாண் அலுவலர் பணி, வங்கி அதிகாரி பணி என நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் புதியதாக ஆரம்பிக்கப்படும் சில வேளாண்மைக் கல்லூரிகளில் சரியான ஆய்வக வசதி, போதுமான ஆசிரியர்கள், ஆய்வுத்திடல், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்  இல்லை. எனவே கல்லூரிகளை தேர்வு செய்யும்போது இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் பல்கலைக்கழக அங்கீகாரம்  உள்ளதாக தேர்வு செய்வது அவசியம்” என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close