Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமித்ஷாவின் அரசியல் பரமபத பயணம்!

அமித்ஷா

மோடி என்ன செய்யப்போகிறார், என்ன திட்டமிடுகிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், ஒரே ஒருவரால் மட்டும், மோடி செய்யப்போகிறார் என்பதைச்  சொல்லமுடியும். ஆம், மோடியின் மனசாட்சியாக இருக்கும் அமித்ஷாதான் அந்த நபர். குஜராத் மாநிலம் மான்சா-வில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அமித்ஷா. அவரது தந்தை Anilchandra Shah மான்சாவில் பி.வி.சி பைப் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தாய் Kusumba ஒரு காந்தியவாதி.  அகமதாபாத்தில் கல்லூரியில் படித்தபோது, ஆர்.எஸ்.எஸ் சேவகரா அமித்ஷா இருந்தார். அந்த சமயத்தில்தான்  ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு வந்த நரேந்திரமோடியை முதன் முதலாக அமித்ஷா சந்தித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னார்வலராக இருந்த சூழலில் ஏ.பி.வி.பி இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்.

தேசிய அரசியலில் ஆர்வம்

முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு  வியாபாரத்தை புறந்தள்ளிவிட்டார். அரசியல் என்று அவர் சிந்தித்ததே தேசிய அரசியலைத்தான். ஆரம்பத்தில் வி.எச்.பி தொண்டராக இருந்தபோது தேசிய அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், அதனைத் தனது டைரியில் குறித்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் அத்வானி போட்டியிட்ட போது அவரது எலக்‌ஷன் ஏஜென்ட் ஆக இருந்தவர் அமித்ஷா. தொகுதியில் கட்சிக்காரர்களிடம் நெருங்கிப் பழகுவார். அகமதாபாத் நகரில் உள்ள பெரும்பாலான மவுலானாக்கள் அமித்ஷாவின் நெருங்கிய குடும்ப நண்பர்கள். பல்வேறு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களைப் பற்றி பொது இடத்தில் அமித்ஷா பேசுவதில்லை.

இந்தியர்களின் சிந்தனைகள்

ஆரம்பத்தில் ஜனசங்கம், பின்னர் பி.ஜே.பி என்று ஏன் தொடங்கப்பட்டது என்பது குறித்து தொண்டர்களிடம் பேசும்போது அமித்ஷா சொல்வது இதுதான். இந்தியாவை இயக்கும் கொள்கைகள் என்பது இந்தியா உடையதாக இருக்க வேண்டும். மேற்கு நாடுகளின் கொள்கைகளாக இருக்கக் கூடாது. பண்டைய காலத்திய இந்தியர்களின் சிந்தனைகள்தான் நல்லது. புதிய இந்தியா என்பது நம்முடைய பாரம்பரியத்தில் இருந்து மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.
1990 கால கட்டத்தில் குஜராத்தில் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரசாரத்தின் இடையே ஒரு உணவகத்தில் உணவுக்காகக் காத்திருந்த போது, மோடியிடம் அமித்ஷா இப்படிச் சொல்கிறார். "நரேந்திரபாய், இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தயாராக இருங்கள்" என்றார். ஆம். மோடியை பிரதமர் பதவியை நோக்கித் தள்ளியவர்களின் அமித்ஷா முதன்மையானவர். மோடி அப்போது குஜராத் முதல்வராகக் கூட இல்லை. மோடியை விட 14 வயது இளையவர் அமித்ஷா. ஆட்சி அதிகாரம், கட்சி அதிகாரம் இரண்டிலும் இவர்கள் இருவரும்  ஒரே நோக்கில்தான் சிந்திப்பார்கள். அந்த அளவுக்கு மோடியின் கருத்தைப் பிரதிபலிப்பவர் அமித்ஷா.
2002-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், Sarkhej தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 1.58 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். மோடி அவரது தொகுதியில் கூட இவ்வளவு வாக்குகள் பெறவில்லை. குஜராத் அரசியலில் மோடி முதல்வர் ஆனபின்னர், அவரது அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக அமித்ஷா இடம் பிடித்தார்.

என்கவுன்டர் வழக்கு

2005-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி Shohrabuddin Sheikh- என்பவரை குஜராத் போலீஸார் சுட்டுக்கொன்றனர். இது வேண்டும் என்றே நிகழ்த்தப்பட்ட என்கவுன்டர் என்று Shohrabuddin Sheikh, அண்ணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 2010ம் ஆண்டு, அமித்ஷா மீது சி.பி.ஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கும் இந்த என்கவுண்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சி.பி.ஐ கூறியது. எனவே அமித்ஷா கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு எழுந்தது. இதனால், அமித்ஷா சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.  இறுதியாக 2010-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். நரேந்திரமோடியை தேசிய தலைவராக முன்னெடுப்பது என பி.ஜே.பி தீர்மானித்தபிறகு, அமித்ஷாவை குஜராத் முதல்வராக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், சி.பி.ஐ வழக்கு காரணமாக அவர் முதல்வர் ஆக முடியவில்லை. இந்த வழக்கின் காரணமாக குஜராத் மாநிலத்துக்கு நுழைவதற்கே அவருக்குதடை விதிக்கப்பட்டிருந்த து. பின்னர் 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அமித்ஷாவுக்கு ஜாமீன் வழங்கியது.

வெற்றிகளைக் குவித்தவர்

2013-ம் ஆண்டு உ.பி லோக்சபாத் தேர்தல் பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். அவரின் திறமையால், பி.ஜே.பி-க்கு 71 தொகுதிகள் கிடைத்தன. நரேந்திரமோடி பிரதமர் ஆகப் பதவியேற்ற உடன், டெல்லியிலும் அவருக்கு அருகில் அமித் ஷா இருக்கும்படி பார்த்துக்கொண்டார் . தன்னுடன் இணக்கமாக இருக்கும் நபர் தேசிய தலைவர் ஆனால், நல்லது என்று தேசிய தலைவர் பதவிக்கு அமித் ஷாவை நியமித்ததில் மோடிக்கு பெரும் பங்கு உண்டு. உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சியில் அமர்ந்ததில் அமித்ஷாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அமித்ஷா, தமது அரசியல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சொந்தவாழ்க்கையில் அமித்ஷா, தம் மனைவி சோனால், மகன் ஜெய் ஆகியோரைச் சார்ந்தே இருக்கிறார். அமித்ஷாவுக்கு இன்னொரு கடமையும் இருக்கிறது. அவரின் உடன் பிறந்த  சகோதரிகள் ஆறுபேர், அவர்களின் குழந்தைகளை அமித்ஷாதான் கவனித்துக் கொள்கிறார். எனவே, சீரியஸ் ஆன அரசியல் ஆலோசனைகளுக்கு இடையேயும் தம் சகோதரிகள் யாராவது அழைத்தால். அவர்களுடன் பேசுவார். அந்த அளவுக்கு தமது சகோதரிகள் மீது பாசம் வைத்திருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close