Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாலுவின் மெகா கூட்டணி 2.0. முயற்சி பலிக்குமா?

மெகா கூட்டணி லாலு

லோக்சபா தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் எந்த வகையிலும் நரேந்திரமோடி, நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் லாலு பிரசாத் யாதவ் துடிப்புடன் இருக்கிறார். உத்தரபிரதேசத்தில் பி.ஜே.பி-க்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரையும் ஒரே அணியில் கொண்டு வந்து மெகா கூட்டணி அமைப்பதில் லாலு பிரசாத் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பீகார் வெற்றி

பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன் முறையாக நிதிஷ்குமார்- லாலு பிரசாத் யாதவ் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தனர். இடைத்தேர்தல் தந்த வெற்றியைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்தது. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேசத்திலும் பி.ஜே.பி-க்கு எதிராக மாயாவதியும், அகிலேஷ் யாதவும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தோல்வி அடைந்தன. இந்தச் சூழலில்தான் லாலு பிரசாத் யாதவ் கூறியது குறித்து இருவரும் சிந்தித்தனர்.

ஒரே மேடையில்...

அகிலேஷ் யாதவ் பீகாரில் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியைப்பிடித்த லாலு-நிதிஷ் குமார் இடையே பிளவு ஏற்பட்டதை அடுத்து வரும் 27-ம் தேதி தமது பலத்தைக் காட்டுவதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மெகா பொதுக்கூட்டத்துக்கு  லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பி.ஜே.பி அல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அகிலேஷ் ஏற்கெனவே அறிவித்து விட்டார். மாயாவதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்று இன்னும் தெரியவில்லை. எனினும், மாயாவதி தமது கட்சியின் பிற தலைவர்களை அந்தக் கூட்டத்துக்கு அனுப்புவார் என்று கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் ஒரே மேடையில் கைகோப்பது திருப்பமாகக் கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்கு பி.ஜே.பி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த மாநிலத் தலைவர்களான திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரையும் லாலு அழைத்துள்ளார். பீகாரைத் தொடர்ந்து குஜராத்தில் ஒரு மெகா பொதுக்கூட்டம் நடத்தவும் எதிர்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

வெர்ஷன் டூ

இதற்கு முன்பு 1993-ம் ஆண்டு  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த கன்சிராமும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்யாதவும்மாயாவதி உ.பி-யில் கூட்டணி வைத்திருக்கின்றனர். 1995-க்குப் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு கட்சிகளும் எதிர், எதிர் அணியில் இருந்தன. இந்தச் சூழலில்தான் பி.ஜே.பி-க்கு எதிராக கூட்டணி சேருவது என்பதில் மாயாவதி, அகிலேஷ் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது. டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற மதிய விருந்தில் மாயாவதி, அகிலேஷ் இருவரும் பங்கேற்றனர். அப்போதில் இருந்தே இந்த இரண்டு கட்சிகளும் ஒரே அணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வரும் லோக்சபா தேர்தலில் உ.பி-யில் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்தால், பி.ஜே.பி-யைத் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து எதிர்கட்சித் தலைவர்களிடம் வலுப்பெற்றுள்ளது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது மெகா கூட்டணி வெர்ஷன் டூ வாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close