Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் கொலை... அதிர்ச்சி வீடியோ! கொலையாளி யார்?

சென்னை: பிரபல டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடியோ கிடைத்திருப்பதாகவும், அவர்களை விரைவில் கைது செய்து விடுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பாபுசிங். வயது 50. சூளை அடுத்த பட்டாளம் டிமிலஸ் சாலையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர், சவுக்கார்பேட்டை இருளப்பன் தெருவில் சிவசக்தி என்கிற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மே 3-ம் தேதியன்று மாலை பாபுசிங்கை அவரது அலுவலக வாசலில் வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

பாபுசிங், டிராவல்ஸ் பிஸினஸில் செல்வாக்கோடு இருந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.


இதுகுறித்து, வடசென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கொலையாளிகளின் உருவம் பதிவான வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளன. இரண்டு பிரிவாக கொலையாளிகள் செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியை இடுப்பில் இருந்து எடுத்து கையாளும் முறையை பார்க்கும்போது, போலீஸ் அல்லது ராணுவத்தில் வேலை செய்தவன் மாதிரி தெரிகிறது. அவனை நெருங்கிவிட்டோம். நாங்கள் அவனை தேடுவதை தெரிந்துகொண்டு கேரளாவில் போய் பதுங்கியிருக்கிறான். ஒரிரு நாளில் அவன் பிடிபடுவான்'' என்றார்.

-ஆர்.பி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ