Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவாரூர் அருகே தேர் கவிழ்ந்து 2 பேர் பலி!

திருவாரூர்: திருவாரூர் அருகே கோயில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் தியாகராஜர் கோயில் உள்ளது. இது சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 12-ம் தேதி ஆரம்பித்து, 21-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், இன்று (20-ம் தேதி) கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேர் கீழவீதியில் வரும்போது மழை சேற்றில் அமிழ்ந்தது. அதனால் பாரம் தாங்காமல் தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது. அதில் தேருக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்த திருவாரூரை சோர்ந்த சுந்தர், முருகேசன் ஆகிய இருவரும் தேரில் சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தேர் கவிழ்ந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனார்

தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து இரண்டு போர் இறந்த சம்பவம் திருக்காரவாசல் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ