Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸ் விசாரணையில் இதுவும் ஒன்று... ரவுடிகளை முடமாக்கும் 'பஞ்சாப் கட்டு'!

ல வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏட்டய்யா அவர். பேச்சுவாக்கில் ஒரு விஷயம் சொன்னார்...

"தம்பி... எப்ப போலீஸ் ஸ்டேஷன்ல குய்யோ, முய்யோன்னு அலறல் சத்தம் கேட்கறது நின்னுதோ, அன்னைக்கு ஆரம்பிச்சுது இந்தப் பிரச்னை. திருடினானா, விரலை உடைச்சுடுவோம்... பொண்ணுங்களை இம்சைப் படுத்தினானா அதுக்கப்புறம் அவனை 'அந்த மாதிரி' மறுபடியும் பண்ணாம செஞ்சிடுவோம்.

ஒவ்வொரு குற்றத்துக்கும் ஒவ்வொரு மெத்தேட்ல ஃபனிஷ்மெண்ட் கையில வெச்சிருக்கோம். கத்தியைத் தூக்கினானா, அத்தோடு அவன் தொலைஞ்சான். அதுக்கு பெஸ்ட் , 'பஞ்சாப் கட்டு'தான். பதமா கட்டி விட்ருவோம். இரண்டு கால்களை நல்லா அகலமா பிரிச்சு வெச்சு செய்யற சின்ன வித்தைதான் 'பஞ்சாப் கட்டு'. 

ஒருமுறை ஸ்டேஷன்ல வெச்சு கட்டை கட்டி விட்டாச்சுன்னா, அத்தோடு அவன் ரவுடியிசம் அவுட்டு.
நம்ம போட்ட 'கட்டை' தான் இன்னைக்கு மலேசிய போலீஸ்ல கொஞ்சம் மாத்தி வேற மாதிரியாக போட்டுக் காட்டிக்கிட்டிருக்காங்க.

இன்னைக்கு 'பஞ்சாப் கட்டு', கட்டத் தெரியுமான்னு ஸ்டேஷன்ல இருக்கிறவங்கக்கிட்டே கேட்டால்,  இந்தியா மேப்ல இருக்கிற  பஞ்சாபைக் காட்டி 'இங்கயிருந்து ஆளை வரவெச்சு பொளந்து கட்டுவீங்களா'ன்னு நம்மளையே திருப்பிக் கேக்கற போலீஸ்தான் அதிகமாயிருக்கு!’’ என்று அலுத்துக் கொண்டார்.

சுவாரஸ்யமாகப் பேசுகிறாரே என்று மேலும் பேச்சுக் கொடுத்தேன்...

‘’அதுக்காக இப்போ ஸ்டேஷன்ல  இருக்கற யாருக்கும் வேலை தெரியலேன்னு பொத்தாம் பொதுவாச் சொல்லிட முடியாது. வேலைக்காரங்க இருக்கத்தான் செய்றாங்க. ஆனா, இருக்கிற 'கமிஷன்' களுக்கு பயப்பட வேண்டியிருக்கு.

ரவுடிகளை கை, காலை உடைக்காமலே அவனுங்களை நடைப்பிணமா மாத்திவிடற அத்தனை டெக்னிக்கும் தமிழ்நாட்டு போலீசுக்கு அத்துப்படி. ஆனா, இப்ப அப்படி செய்ய முடியலை.  அதே வேளையில் அன்று உண்மையான ரவுடிகளையும், கேடிகளையும்தான் நாங்கள், ஸ்டேசனுக்கு கொண்டு வருவோம். இப்போதுள்ள பலர், சாதாரண குடும்பச் சண்டை விவகார புகாரில்கூட 'டீல்' பேசுவதற்காக அப்பாவிகளை ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து அவர்களை கண்டமேனிக்கு பிரித்து மேய்ந்து விடுகிறார்கள், அந்தப் போக்கு மாறவேண்டும்.

ஸ்டேஷனில் வைத்து போலீசார் நடத்தும் ஒவ்வொரு  விசாரணை குறித்தும் நிலைய இன்ஸ்பெக்டருக்கும், இன்ஸ்பெக்டர் நடத்துகிற விசாரணை குறித்து ரேஞ்ச் உதவி.கமிஷனருக்கும் அன்றாடம் தெரியவேண்டும், அப்படி ஒரு 'மானிட்டரிங் சிஸ்டம்' போலீசில் எப்போதுமே உண்டு, அதற்கு தனி 'ரெகார்ட்-நோட்' டும் உண்டு. அதை ஒரு பொருட்டாக உயர் அதிகாரிகள் அன்றாடம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொய்வழக்கு போடுவது, அப்பாவிகள் மீதான டார்ச்சர், ஸ்டேஷனில் வைத்து நடத்தும் பஞ்சாயத்து போன்றவைகள் இதனால் அடிபட்டுப் போகும், எது நடந்தாலும் உயரதிகாரிக்கு சொல்ல வேண்டும் என்ற சிஸ்டமே இப்போது மறதியாகிக்  கொண்டு வருகிறது

மாம்பலத்தான்னு ஒரு பெரிய தாதா. ஐஸ் ஹவுஸ் ஏரியாவில் அவன் அட்டகாசம், 80-களில் கொடிகட்டிப் பறந்தது. அப்ப ஐஸ் ஹவுஸ் ஸ்டேஷனுக்கு  வெங்கட்ராமன்னு ஒரு சப்-இன்ஸ்பெக்டரு புதுசா வந்தாரு.  போலீஸ்ல கான்ஸ்டபிளா வேலைக்கு வந்து, படிப்படியா எஸ்.ஐ. ஆன வெங்கட்ராமன், நேஷனல் லெவல்ல பேரெடுத்த நீச்சல் வீரர்.

ஒருநாள் புது எஸ்.ஐ. வெங்கட்ராமன்கிட்டே மாம்பலத்தான் மாட்டிக்கிட்டான்.  ஆளைக் கொண்டு வந்து ஸ்டேஷன்ல வெச்சு விசாரணை போய்க்கிட்டிருக்கும்போதே அவன் எஸ்.ஐ.யை அட்டாக் பண்ணியிருக்கான். இவரும் திருப்பித் தாக்கியதில் மாம்பலத்தான் காலி.

அப்பல்லாம் கமிஷன், அது இதுன்னு எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு அரசியல் கட்சி, மாம்பலத்தான் மரணத்தை 'லாக்கப் -டெத்' என்று கையில் எடுத்துக் கொள்ளவே, வெங்கட்ராமனை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அன்றே அப்படி ஒரு சூழ்நிலை, இப்போதென்றால் வெங்கட்ராமனுக்கு பணி நீக்கத்தோடு தண்டனையும் வாங்கிக் கொடுத்திருப்பாங்க.

இந்த அயோத்திக் குப்பம் வீரமணி, அவர் தம்பி வீரக்குமாரு, குண்டு, திருநா, தோட்டம் சேகரு, ஜாம்பஜார் முரளி  இப்படி சமீபத்தில இருந்த தாதாக்கள்லாம் அப்ப சின்னப் புள்ளைங்களா இருந்திருப்பாங்க, மாம்பலத்தான்  பற்றியெல்லாம் அவங்களுக்கு விவரங்கள் ஏதும் தெரியாது.

வடசென்னைல இருக்கும் ராயபுரம் போலீஸ் லிமிட்டுல சொல்லணும்னா, மீனாட்சியம்மன் பேட்டை லோகு, லாக்கப் -டெத்' தை சொல்லலாம். இந்த லோகு, சென்னையின் நம்பர் ஒன் தாதாவாக எங்க ரெக்கார்டில் இருந்த ஏழுமலை நாயகரின் சிஷ்யன்.

லோகு மீதும் பல வழக்குகள் இருந்தது. ஸ்டேஷன்ல வெச்சு விசாரிக்கும் போதே,  பயத்துல ஆள் காலி.  லோகு இறக்கும் போது ஸ்டேஷன் டூட்டியில இருந்த இன்ஸ்பெக்டரில் ஆரம்பித்து, எஸ்.ஐ, ஏட்டுகள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களின் பதவி உயர்வும் இதனால் பறிபோனது. இப்படிப் பல போலீசாரின் வாழ்க்கையே வீணாகப் போய்விட்டது.

ரவுடிகளுக்கும் எங்களுக்கும் என்ன முன் விரோதமா? பொதுமக்கள் நிம்மதியாக வாழ சட்டத்துக்கு உட்பட்டு பாதுகாப்புகளை எப்படியெல்லாம் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கொடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். ஒரு சில போலீசார், சமூக விரோதிகளுடன் கைகோத்துக் கிடப்பதை கண்டெடுத்து அவர்களை யாரென்று இனங்கண்டு,  பணி நீக்கம் செய்ய அரசுகள் பாரபட்சம் காட்டாமல் முன்வர வேண்டும்

ரவுடிகளையே  போலீசார் தொடக் கூடாது என்று சொன்னால் எப்படி? ரவுடிகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், போராட்ட அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டுமல்லவா, இதில் மட்டும் பாரபட்சம் ஏன்?".  இவ்வாறு போகிறது ஏட்டய்யா க்களின் குரல்கள்.

இதே விவகாரத்தின் மறு கோணமாக மனித உரிமை ஆர்வலர்களிடம் பேசியதில், ''அவர்கள் (குற்றஞ் சாட்டப் பட்டவர்கள்) மீதான தவறுகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபித்து  உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுதான் போலீசாரின் கடமையும், வேலையும். உயிரை எடுக்கிற அதிகாரத்தை போலீசாருக்கு யாரும் கொடுக்க வில்லை.

ஆளைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் பின்னர் சுட்டுக் கொல்வது என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணம் ஆனதால்தான், இப்போது போலீசாரால் போலி என்-கவுன்ட்டர்களை செய்ய முடியவில்லை" என்று குற்றஞ் சாட்டுகின்றனர்.

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close