Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூக்கத்தில் எழுந்து கதவை திறந்த சென்னை தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்


அதிகாலையில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு தூக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்த தொழிலதிபரை முகமூடி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி 150 பவுன் நகைகளையும், ரூ.14 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

திருவான்மியூர், மகாலட்சுமி அவென்யூ, எம்.ஜி.ஆர். சாலையை சேர்ந்தவர் மதியரசன் (வயது 55). ரியல் எஸ்டேட் மற்றும் நிதிநிறுவன தொழில் செய்து வரும் இவர், சென்னையில் 3 இடங்களில் மது பார்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி (50). மகள் சுமதி(21) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மகன் ராதாகிருஷ்ணன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் அவரது மைத்துனர் சரவணன் தங்கி உள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் மதியரசன் வீட்டு கதவை யாரோ தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு தூக்கத்தில் எழுந்து கதவை திறந்தார் மதியரசன். அப்போது, முகமூடி அணிந்து 7 பேர் நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்ட மதியரசனை கொள்ளையர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், தலை, கழுத்து, தோள், முகம், கை போன்ற பகுதிகளில் மதியரசனுக்கு காயங்கள் ஏற்பட்டன. இதை பார்த்து சத்தம் போட்ட அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என கொள்ளையர்கள் மிரட்டியதோடு, மதியரசனையும், அவரது குடும்பத்தினரையும் தனி அறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த சாவியையும், அணிந்து இருந்த நகைகளையும் பறித்துக் கொண்ட கொள்ளையர்கள், பீரோவை திறந்து இதில் இருந்த 150 பவுன் நகைகளையும், ரூ.14 லட்சத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கு நின்றிருந்த சொகுசு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்கள் சென்ற பின்னர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து காயங்களுடன் இருந்த மதியரசனை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதியரசன் குடும்பத்தினருடன் கொள்ளையர்கள் வாக்குவாதம் செய்தபோது ஒரு கொள்ளையனின் முகமூடி கழன்றுவிட்டது. இதனால் அவனது அடையாளங்களை காவல்துறையினரிடம் மதியரசன் குடும்பத்தினர் தெரிவித்தனர். கொள்ளையர்கள் 20 வயதில் இருந்து 27 வயதிற்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ