Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உடுமலை சங்கர் கொலை வழக்கு... கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திருப்பூர்: உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கலப்பு திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கூலிப்படை கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீசன், பழநியை சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பாண்டித்துரை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவன் மதன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற 9 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கல்லூரி மாணவர் பிரசன்னா, மதன் என்கிற வீரன்பட்டி மணிகண்டன் ஆகியோர் தவிர மற்ற 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்ற ஆட்சியர் ஜெயந்தி, 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 9 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல், கோவை மற்றும் திருச்சி சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ