Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் மகள், பேத்திகளின் வாழ்க்கையை சிதைத்த சின்னராஜை தூக்கில் போடுங்கள்! -பாண்டியம்மாள் தந்தை ஆவேசம்

சென்னை: எனது மகள் மற்றும் பேத்திகளின் வாழ்க்கையை சிதைத்த சின்னராஜை உடனே தூக்கில் போடுங்கள் என்று கொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள் தந்தை கண்ணீருடன் ஆவேசமாக கூறினார்.

சென்னையில் 2வது கணவரால் படுகொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோருடைய உடல்களை பெற்றுக்கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டையிருப்பு கிராமத்தில் இருந்து பாண்டியம்மாள் தந்தை சின்னையா (எ) பால்சாமி (65) நேற்று சென்னை வந்திருந்தார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரதே பரிசோதனை கூடம் அருகே சோகத்துடன் அவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் ஆவேசத்துடன் கண்ணீர் மல்க கூறும்போது, ''எனது மகள் பாண்டியம்மாளின் முதல் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் பாண்டியம்மாள் என்னுடைய 3 பேத்திகளையும் அழைத்து கொண்டு எங்கோ சென்றுவிட்டார்.

கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் இருந்தேன். சமீபத்தில் தான் சின்னராஜூவுடன் சென்னையில் பாண்டியம்மாள் என் பேத்திகளுடன் வசிப்பது எனக்கு தெரிந்தது. அதன் பின் அவர்களை வீட்டுக்கு அழைத்தேன். அதன்படி கடந்த 19-ம் தேதி பாண்டியம்மாள் 3 மகளுடன் ஊருக்கு வந்தாள்.

அவள் மகிழ்ச்சியுடன் தான் காணப்பட்டால். அதனால் தான் நானும் மகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள் என்று சந்தோசமாக இருந்தேன். ஆனால் அதற்குள் அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. எனது மகள் மற்றும் பேத்திகளின் வாழ்க்கையை சிதைத்த சின்னராஜை உடனடியாக தூக்கில்போட வேண்டும்" என்றார்.

இதனிடையே, பாண்டியம்மாள் மற்றும் அவருடைய 3 மகள்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. கொலை என்பதால் ஒவ்வொருடைய உடலும் நீண்ட நேரம் பிரேத பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 4 பேரின் உடல்களும் நேற்று மாலை 6 மணியளவில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது.

அதன் பின்னர் 4 பேரின் உடல்கள் பாண்டியம்மாள் தந்தை பால்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு எடுத்து சென்று தகனம் செய்ய பால்சாமி விரும்பவில்லை. அதனால் 4 பேரின் உடல்களையும், போலீசார் உதவியுடன் சென்னை ஐஸ்அவுசில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் பால்சாமியும் அவருடைய உறவினர்களும் நேற்று இரவு தகனம் செய்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close