Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஏன் ஆறுதல் கூறவில்லை? தமிழிசை ஆவேசம்!

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதியின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூட ஏன் தெரிவிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில்,சுவாதியின் கொலையைக் கண்டித்தும் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் அதில் கலந்துகொண்டு பேசிய டாக்டர்.தமிழிசை,"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு  நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்தில் சென்னை மாநகரில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளன. ஆனால், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.

நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சுவாதி படுகொலை தமிழகம் முழுவதும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஆனால், இந்த கொலையைக் கண்டித்து முதல்வரோ, அமைச்சர்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை. சுவாதியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசு நவீன நகரங்களை உருவாக்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு கொலை நகரங்களை உருவாக்கி வருகிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரவுடிகள், கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்த வேண்டும்'' என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ