Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள்! - விசாரணை விவரங்கள்

சுவாதியை கொன்ற கொலையாளி யார்? என்கிற விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று இரவு தமிழக போலீஸ் டி.ஜி.பி-யான அசோக்குமார் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரில் விசிட் செய்து விசாரித்தார். ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த ரயில்வே போலீஸார் சுவாதிக்கு தெரிந்தவர்கள் என்கிற பட்டியலை எடுத்து விசாரித்தனர்.

அவர்கள் விசாரித்த கோணத்தில் சென்னை போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி  ஒருவரிடம் பேசினோம்!

சுவாதியின் நண்பர் என்கிற ஒருவரின் பெயர் இந்த வழக்கில் அடிபடுகிறதே? அவரிடம் ஏதாவது தகவல் கிடைத்தா?

''அவர் காதலாரா? அல்லது, நண்பரா? என்பது விசாரணையில் இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில், வேற்று மதத்தை சேர்ந்த அவர் ஒரு சடங்கை தீவிரமாக கடைபிடிக்கிறவர். ஆனால், ரொம்பவும் 'சாப்ட்'டான டைப் ஆக தெரிகிறார். அதனால், ரயில்வே போலீஸார் அவரை அழைத்து பேசவில்லை. போனில்தான் பேசினார்கள். ஆனால், தற்போது அந்த இளைஞரை நேரில் வரச்சொல்லி பேசியிருக்கிறோம். இந்த இளைஞர் சுவாதியுடன் கல்லூரியில் படித்தவராக கூட இருக்கலாம்''.

மர்ம நபர் ஒருவன் தன்னை பின் தொடர்வதை சுவாதி யாரிடமாவது இதற்கு முன்பு சொல்லியிருக்கிறாரா?

''நிச்சயமாக. செல்போனில் அவரது நண்பரிடம் சிலமுறை தெரிவித்திருக்கிறார். கொஞ்ச நாட்களாகவே, தன்னை யாரோ பின்தொடர்வதாக சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், போலீஸுல் புகார் செய்யலாமே? என்று கூட சொல்லியிருக்கிறார். ஆனால் சுவாதியோ, அந்த அளவுக்கு போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்''.

சுவாதி பணிபுரியும் இடத்தில் ஏதாவது க்ளு கிடைத்ததா?

''நுங்கம்பாக்கத்தில் இருந்து ரயிலில் போய் பரணூர் ரயில்வே ஸ்டேஷனில் சுவாதி வழக்கமாக இறங்குவார். அங்கிருந்து டாக்ஸி மூலம் மகேந்திரா சிட்டியில் அவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு போய் வந்திருக்கிறார். இந்த மர்ம நபர் அந்த கம்பெனி வரையில் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. ஒருமுறை, சுவாதி அவருக்கு நெருக்கமானவர்களிடம், யாரோ வேறு மாநிலத்தை சேர்ந்தவன் மாதிரி தெரியுறான். என்னையே ஃபாலோ செய்கிறான் என்று பதட்டத்துடன் சொல்லியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வழக்கமாக சுவாதி போகும் கோவிலில் ஒருமுறை மர்ம நபர் போயிருக்கிறான். என்னை தெரிகிறதா? என்று கேட்டிருக்கிறான். அதற்கு சுவாதி தெரியவில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறார். இதை அவர் பிறரிடம் பிறகு சொல்லியதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதிலிருந்து அவனை சுவாதிக்கு முன்-பின் தெரிய வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறோம்''.

சுவாதியின் செல்போன் மிஸ் ஆனது பற்றி ஏதாவது தகவல் உண்டா?'

''அதுதான் மர்மமாய் இருக்கிறது. ஆனால், அவர் நம்பரை வைத்து கால் விவரங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதில் நிறைய க்ளுக்கள் கிடைத்துள்ளன. கொலையாளி அந்த போனை எடுத்துச் சென்றிருக்கலமா? என்று கூட சந்தேகம் இருக்கிறது. கடைசியாக அந்தப் போனை சுவாதி எப்போது பயன்படுத்தினார் என்பது பற்றி இப்போதைய நிலையில் கூற முடியாது. பரணூராக இருந்தாலும், நுங்கம்பாக்கமாக இருந்தாலும் ஒரு நொடிக்கு ஒரு லட்சம் கால்கள் குறிப்பிட்டவர்களில் போயிருக்கின்றன. எஸ்.எம்.எஸ் மேஜேஸுகளும் அப்படித்தான். அதையெல்லாம் எலிமினேஷன் முறையில் குறைத்து வருகிறோம். புதுவித டெக்னிக்கலை பயன்படுத்தி கொலையாளியை பிடிக்க வலை விரித்திருக்கிறோம்'' என்றார்.

போலீஸாரின் பார்வை வேறு கோணத்திலும் திரும்பியிருக்கிறது.

சுவாதிக்கு சமீபத்தில் அறிமுகமான யாராவது வெளிமாநில கூலிப்படை ஆளிடம் அசெய்ன்மெண்டை கொடுத்து இந்த கொலையை நிகழ்த்தியிருக்கிறார்களா? அதற்கு என்ன பின்னணி? என்கிற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்

-கனிஷ்கா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ