Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதியை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தானா..?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மென்பொருள் பொறியாளர் சுவாதி, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எட்டு நாட்களுக்குப் பிறகு துப்பு துலங்கியது.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் சிக்குவதற்கு முன் ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ராயபேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுவாதியும், ராம்குமாரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகி இருக்கிறார்கள். அதன்பிறகு சுவாதியின் வீட்டின் அருகே உள்ள மேன்ஷனில் தங்கிய ராம்குமார், அவரை பின்தொடர்ந்துள்ளார். ராம்குமாரின் காதல் எண்ணத்தை அறிந்த சுவாதி, அவரிடமிருந்து விலகியுள்ளார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் ராம்குமார், சுவாதியை கொலை செய்துள்ளார் என்று தனிப்படை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சுவாதிக்கும், ராம்குமாருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். அதில் புதிய தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ''சுவாதியும், சூர்யபிரகாஷ் என்பவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்துள்ளனர். அதே நேரத்தில் சூர்யபிரகாசும், ராம்குமாரும் ஃபேஸ்புக் நண்பர்கள். இந்த நட்பு வட்டாரத்தில் சூர்யபிரகாஷ் மூலமாகவே சுவாதியின் நட்பு ராம்குமாருக்கு கிடைத்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை போலீஸார் ஒருவார காலம் தேடிய நேரத்தில், சூர்யபிரகாஷ் அமைதியாகவே இருந்துள்ளார். ஆனால் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ராம்குமாரின் அறையில் தங்கிய காவலாளி நடேசன், மேன்சன் காவலாளி கோபால் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை எங்களிடம் தெரிவித்தனர். அந்த தகவல் மூலம் குற்றவாளியை நெருங்க முடிந்தது.

மேலும், சுவாதியின் நெருங்கிய நண்பரான திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது பிலால் சித்திக், போலீஸாருக்கு பல முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். ஆனால் சுவாதி கொலை தொடர்பாக அவரது ஃபேஸ்புக் நண்பரான சூர்யபிரகாஷ் எந்தத் தகவலையும் எங்களுக்கு தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அப்போது சூர்யபிரகாஷ் குறித்து ராம்குமாரிடமும் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ