Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்குமாரை சிக்க வைத்த காவலாளி போலீஸில் சொன்னது என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை நடந்த பிறகு, சி.சி.டிவி கேமராவில் பதிவான மர்மநபரின் படத்தைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாருடன் மேன்ஷனில் அறை எண்- 404ல் தங்கி இருந்த காவலாளி நடேசன், தனிப்படை போலீஸ் உயரதிகாரியை போனில் தொடர்பு கொண்டு சில தகவல்களைத் தெரிவித்தார்.

உடனடியாக போலீஸ டீம், மேன்ஷனில் இருந்த நடேசனை அழைத்துச் சென்று தனியாக விசாரித்தனர். அப்போது, நடேசன், தன்னுடைய அறையில் சி.சி.டிவி படத்தில் உள்ள நபர் அணிந்திருக்கும் சட்டை, ரத்த கறையுடன் இருப்பதாகச்  சொல்லியுள்ளார். இதையடுத்து போலீஸ் டீம், அந்த அறைக்கு சென்று, சட்டையைக் கைப்பற்றியதோடு, ராம்குமார் குறித்த தகவல்களை சேகரித்துள்ளது. இதன்பிறகே இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடேசனிடம், போலீஸார் இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக யாரிடமும் எந்தத் தகவலையும் தெரிவிக்கக் கூடாது என்று அவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டுள்ளனர். அதோடு அந்த மேன்சனில் இருந்து அவரை உடனடியாகச்  சொந்த ஊரான திருச்சி அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவர், தன்னுடைய வறுமை நிலையை போலீஸாரிடம் சொன்னவுடன் போலீசாரே குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ்.மேன்ஷனில் உள்ள 404 அறை எண் இதுவரை போலீஸ் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. ராம்குமார் உடல் நிலை சரியானதும், அவர் எப்படி சுவாதியைக் கொலை செய்தார் என்பதை நடித்து காட்டும் வரை, அந்த அறையைப் பூட்டியே வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், மேன்சனில் தங்கியிருக்கும் தனியார் நிறுவன ஊழியர் கோபால் கூறுகையில், ''சுவாதி கொலை நடந்த அடுத்த நாள் போலீசார் மேன்ஷனுக்கு வந்தனர். அங்கு தங்கியிருந்த அனைவரின் செல்போன் மற்றும் விவரங்களைச் சேகரித்தனர். அப்போதுகூட ராம்குமார் எங்கள் மேன்ஷனில் தங்கியிருந்த விவரம் போலீசுக்கு தெரியாது. நெல்லையில் ராம்குமாரைக் கைது செய்வதற்கு முன் மேன்ஷனுக்கு வந்த போலீசார், அவர் தங்கி இருந்த அறையைச் சோதனை செய்தனர். ராம்குமாரின் உடமைகளை போலீசார் எடுத்துச் சென்றனர். அவருடன் தங்கி இருந்த காவலாளி நடேசன் அதன்பிறகு மேன்ஷனுக்கு வரவேயில்லை" என்றார்.

-எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close