Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயணிகளை பதற வைத்த இரட்டைக்கொலை..! திகில் கிளப்பிய திருநெல்வேலி


நெல்லை அருகே ஓடும் பேருந்தில் பயணிகள் கண்முன்னே அண்ணன்- தம்பி இரண்டு பேர், மூன்று பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், முக்கூடல் அடுத்த ஸ்ரீபத்மநல்லூரை சேர்ந்த சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (46), மாரியப்பன் (44). சகோதரர்களான இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் முக்கூடலில் ஏற்பட்ட தகராறில் கண்ணப்பனை, சுப்பிரமணியும், மாரியப்பனும் சேர்ந்து படுகொலை செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் இன்று காலை சுப்பிரமணி, மாரியப்பன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பேருந்தில் வீரவநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். பேருந்தின் பின் பக்க படிக்கட்டின் வழியாக சுப்பிரமணியும், மாரியப்பனும் இறங்க முயன்றனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 3 பேர் பேருந்தை விட்டு இறங்கிய மாரியப்பனையும், சுப்பிரமணியையும் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்பு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் கண்முன் இந்த கொடூர கொலைகள் அரங்கேறின. இந்த படுகொலை சம்பவத்தை பார்த்து பயணிகள் பேருந்து விட்டு இறங்கி அலறி அடித்து ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வீரவநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து,  கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.


எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ