Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடியில் வாங்கிய போலி சிம்-கார்டு! - ராம்குமார் விவகாரத்தில் கலங்கும் போலீசார்

தூத்துக்குடியில், போலி முகவரி கொடுத்து ராம்குமார்  சிம் கார்டு வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டவர் சுவாதி. இந்தக்  கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் கொலையாளியைத்  தேடி வந்தனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை- மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை இது தொடர்பான வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ராம்குமார், நெல்லை அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சென்னைக்குக்  கொண்டு வரப்பட்ட ராம்குமாரை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு போலீசார் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் தற்போது சென்னை மத்திய் புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ளார்.

ராம்குமார் வழக்கில் அடையாள அணிவகுப்பு இன்று (12.7.2016) புழல் சிறையில் நடந்து முடிந்துள்ள வேளையில் நேற்று நடந்துள்ள விசாரணையின் முக்கியமான ஒரு சம்பவம் பற்றி போலீஸ் ஏரியாவில் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.

"ராம்குமாரிடம் இருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். சிம்கார்டையும் கைப்பற்றி, அதன் விபரத்தைச் சேகரித்த போதுதான் அது தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சங்கர் என்பவர் பெயரில் வாங்கி இருந்தது தெரிய வந்தது. தூத்துக்குடி சண்முகபுரத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் அந்த முகவரி போலியானது என்று தெரியவந்துள்ளது " என்கிறார்கள்.

'சிம்கார்டில் இருக்கும் பெயருக்குரிய சங்கரே போலியான ஆசாமி என்றால்?' என்ற குழப்ப  கேள்வியுடன் போலீசார் மீண்டும் தங்களின் விசாரணையைத் தீவிரமாகத் தொடர ஆரம்பித்துள்ளனர்.

- ந.பா.சே.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ