Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடுவீதியில் பெண் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல்; காவலர்களுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

செங்கம்: செங்கம் பேருந்துநிலையத்தில் நடுரோட்டில் ஒரு குடும்பத்தை கண்மூடித்தனமாக தாக்கிய 3 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மறுக்கப்பட்டோர் நீதிக்கான அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர், செங்கம் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் தன் மனைவியுடன் பொருட்களை வாங்க வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் தகராறை தடுத்துள்ளனர். இதையடுத்து பின்னர் போலீஸாருக்கும், தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த காவலர்கள் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா, அவரது மனைவி மற்றும் மகனை சுற்றி வளைத்து தாக்கினர். அதன் வீடியோ காட்சி அன்றைய தினம் வெளியாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோக்கவாடி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து செங்கம் காவல் நிலையத்திலிருந்து, காவலர்கள் மூவரும் வேலூர் ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ராஜா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் மறுக்கப்பட்டோர் நீதிக்கான அமைப்பினர் நேரில் சென்று நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், “ பணியிடமாற்றம், நடவடிக்கை ஆகாது. ராஜா குடும்பத்தினரை தாக்கிய 3 போலீஸார் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எங்களது விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close