Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

படப்பை அருகே சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்கள் (வீடியோ)

தாம்பரத்தை அடுத்த, படப்பை அருகே உள்ள வஞ்சுவாஞ்சேரியில், மூடிய  கடை ஒன்றின் ஷட்டரை இரும்புக் கம்பியால் திறந்து கொள்ளையடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் அது வைரலாகியுள்ளது. 

எலெக்ட்ரிக்கல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் அந்தக்  கடையில் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும், இரவு நேரத்திலும் தெளிவாகத்  தெரியும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நேற்று (29.07.16) காலை வழக்கம் போல கடையைத்  திறக்க வந்த கடையின் உரிமையாளர், கடையின் பூட்டு திறக்கப்பட்டுள்ளதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கடையின் உள்ளே பொருட்கள் காணாமல் போயிருந்ததையும் பார்த்து மேலும் அதிர்ந்துபோனார். 

இதனையடுத்து அவர் உடனே, சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்துள்ளார். அதில், கொள்ளையடிக்கும் நோக்கில் 3 இளைஞர்கள் கடையின் முன்பு வந்து, ஒருவன் வெளியே காவலுக்கு நின்று கொள்ள,  மற்ற 2 இளைஞர்களும் உள்ளே சென்று, 12 கோணிப்பைகளில் பொருட்களை 'பேக் 'செய்த காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
மேலும், கொள்ளையர்கள் கடையில் இருந்த 12,000 ரூபாயும், ஒரு செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பெயரில் மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 -பா.ஜெயவேல்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ