Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்லூரி வகுப்பறையில் மாணவி கட்டையால் அடித்துக் கொலை! கரூர் அதிர்ச்சி

கரூர் : கரூரில் கல்லூரிக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மாணவியை முன்னாள் மாணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர், ஈரோடு சாலையில் உள்ள கரூர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் எனும் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சோனாலி. இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சோனாலி, வகுப்பறையில் அமர்ந்திருந்தார். காலை 10 மணியளவில் அப்போது வகுப்பறையில் மாணவர் போல் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென சோனாலியை பின்னால் இருந்து மரக்கட்டையால் கடுமையாக தாக்கினார். மாணவியை சரமாரியாக தாக்கிய அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதில் சோனாலி படுகாயமடைந்தார். காலை 11 மணியளவில் கரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சோனாலி, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் கொண்டு செல்லப்பட்டார். சுமார் 2 மணி நேரம் சிகிச்சை அளித்தபோதும் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே வகுப்பறையில் நுழைந்து சோனாலியை தாக்கிய வாலிபரை கரூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் உதயகுமார் என்பதும், இந்த கல்லூரியில் இடை நின்ற மாணவர் என்பதும் தெரியவந்தது. உதயகுமார் சரியாக கல்லூரிக்கு வராததால் சஸ்பென்ட் செய்யப்பட்டதையடுத்து அவர் கல்லூரிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. சோனாலியை உதயகுமார் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை சோனாலி ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கல்லூரிக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம், மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "கல்லூரியில் வகுப்பறையில் இருந்த மாணவியை ஒருவர் வந்து தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்செல்லும் அளவுக்கு தான் கல்லூரியில் பாதுகாப்பு என்பது உள்ளது. இது தொடர்பாக எந்த தகவலையும் தெரிவிக்காமல் விடுமுறையை மட்டும் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது," என்றார்.

கல்லூரியில் புகுந்து மாணவி கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

- சி.ய.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ