Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடி கொடூரம்... சர்ச்சில் ஆசிரியையை வெட்டிக்கொன்று வாலிபர் தற்கொலை!

 

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இன்று காலை சர்ச்சில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பள்ளி ஆசிரியையை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். ஒரு தலை காதலால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிகிறது.


தூத்துக்குடி, ஜார்ஜ்ரோடு, இந்திராநகரை சேர்ந்த நியூட்டன் என்ப்வரின் மகள் பிரான்ஸினா (24). கீழ சண்முகபுரம் செயிண்ட் பீட்டர் ஆங்கில பள்ளில் 3ம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரான்ஸினா இன்று காலை கீழ சண்முகபுரத்திலுள்ள பேட்ரிக் கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆலயத்துக்கு வந்த வாலிபர் பிரான்ஸினாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பிரஸ்லினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரஸ்லினாவை அரிவாளால் வெட்டியது கீகன் ஜோஸ் (27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மணல் தெரு என்கிற பகுதியில் கட்டப்பட்டு வரும் வீட்டுக்குள் கிகன்ஜோஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிரன்ஸினாவை கீகன் ஜோஸ் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், பிரன்ஸினாவை ஏற்க மறுத்து வேறு நபரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால், பிரன்ஸினாவை கொலை செய்து விட்டு கீகன் ஜோஸ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

நேற்று கரூரில் கல்லூரி வகுப்பறையில் புகுந்து மாணவி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சர்ச்சில் புகுந்து இளம்பெண்ணை வெட்டிக்கொன்று, வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள் : ஏ.சிதம்பரம்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ