Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புது கமிஷனர் ஜார்ஜ்... கோட்டையில் 'உள்ளே - வெளியே' யார் யார்?

 

சென்னை போலீஸ் கமிஷனராக மீண்டும் ஜார்ஜ், பதவியில் அமர்ந்துவிட்டார். அதையடுத்து, தனது எண்ண ஒட்டத்திற்கு தகுந்தபடி பணிபுரியும்  உயர் போலீஸ் அதிகாரிகளை சென்னை போலீஸுற்கு அழைத்து வரப்போகிறார் என்கிற தகவல் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 


ஜார்ஜுடம் பணிபுரிய போலீஸ் அதிகாரிகள் பலரும் எதிர்பார்ப்பார்கள். காரணம், ஜார்ஜ் ஏற்கனவே கமிஷனராக இருந்த காலங்களில் நடந்த சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.


" ஜார்ஜ், கமிஷனராக இருந்த மூன்று வருடங்களில் நடந்த சட்டம்-ஒழுங்கு தொடர்பான சம்பவங்களில் சக அதிகாரிகள் பாதிக்கப்படாமல் அவர்கள் எடுத்த ஸ்பாட் முடிவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுப்பார். யாரையும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒருமுறை, கோடம்பாக்கத்தில் பள்ளி வளாகத்தில் நடந்த ஒரு வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு மேலிடம் தலையீட்டு தி.நகர் துணை கமிஷனரை மாற்றியது. அந்த ஒரு சம்பவத்தை தவிர வேறு எந்த நிகழ்வுகளின் போதும் அதிகாரிகள் யாரையும் ஜார்ஜ் மாற்றவில்லை. 'எது நடந்தாலும் கமிஷனர் என்கிற வகையில் நான்தான் பொறுப்பு' என்கிற பாணியை தீவிரமாக பின்பற்றி வந்தார். இந்த பாணி சக அதிகாரிகளுக்கு பிடித்துபபோனது.  ஆனால், டி.கே. ராஜேந்திரன் கமிஷனராக இருந்த காலகட்டத்தில் அண்ணாசாலையில் முதல்வர் ஜெயலலிதா அண்ணா சிலைக்கு மாலையிட வந்தபோது ஏற்பட்ட டிராஃபிக் நெரிசலால் டென்ஷன் ஆனார். அப்போதைய டிராஃபிக் உயர் அதிகாரி ஜெயராமன் தூக்கி அடிக்கப்பட்டார். தலைமைச் செயலகத்தில் தி.மு.க-வினர் போட்டி சட்டசபை நடத்திய விவகாரத்தில் முதல்வர் கோபமானார். அன்றைய தினம் பல உயர் அதிகாரிகள் ஸ்பாட்டில் இருந்தும், பூக்கடை துணை கமிஷனர் சக்திவேலுதான் காரணம் என்று சொல்லி அவரை  மாற்றினார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் அப்போதைய கமிஷனர் ராஜேந்திரன் நடந்துகொண்ட விதம் சக போலீஸ் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை" என்று சொல்கிறார் சென்னை போலீஸுன் முக்கிய அதிகாரி ஒருவர்.  


ஜார்ஜுக்கு இந்த முறை கமிஷனராகும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு பின்னணியில் ஆட்சி மேலிடத்துக்கு ஆலோசகராக செயல்படும் ஒருவர் இருப்பதாக கோட்டை வட்டாரம் கிசுகிசுக்கிறது. 'இது ஜார்ஜுக்கு தற்காலிக பதவிதான். கூடிய விரைவில், மத்திய அரசுக்கு மாநில அரசு சிபாரிசு செய்திருக்கும் டி.ஜி.பி. லிஸ்டில் ஜார்ஜ் இருக்கிறார். அங்கிருந்து முறைப்படி ஒப்புதல் அளித்தவுடன் தமிழக சட்ட ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட இருக்கிறார். அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை நிச்சியமாக சென்னை போலீஸுல் இருப்பார்' என்று சொல்லும் ஜார்ஜ் ஆதரவு ஐ.பி.எஸ் அதிகாரிகள் படு குஷியில் இருக்கின்றனர். இப்போது அவர்களில் சிலர் தற்போது வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மீண்டும் சென்னை மாநகர போலீஸுற்கு வர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதற்கு கமிஷனர் ஜார்ஜ் தரப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. அதற்கான பட்டியலும் தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பு வருகிற 17-ம் தேதியன்று வரலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். அதற்கு முன்பே, சென்னை போலீஸுல் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம் என்கிறார்கள்.


உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நேரத்தில், கமிஷனர் ஜார்ஜ், சொல்லும் கட்டளைகளை விரைந்து செயல்படுத்தும் துறுதுறு ஐ.பி.எஸ் அதிகாரிகளை சென்னை போலீஸுக்கு தேவை. இதற்காகவே இந்த இடமாறுதல் என்கிறது காவல் துறை வட்டாரங்கள். ஜார்ஜிக்கு நெருக்கமானவர்களின் பட்டியலில் நெல்லை சரக டி.ஐ.ஜியாக இருக்கும் தினகர், மீண்டும் சென்னைக்கு வரவுள்ளார். அடுத்து நெல்லையில் கமிஷனராக இருக்கும் திருஞானத்துக்கு மீண்டும் தலைமையக கூடுதல் கமிஷனர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாம். திருச்சி சரக டி.ஜ.ஜியாக இருக்கும் அருணை சென்னைக்கு கொண்டு வர இருக்கிறாராம். புளியந்தோப்பு துணை கமிஷனராக இருக்கும் செல்வகுமார் மீண்டும் மத்திய குற்றப்பிரிவுக்கு வரலாம் என்கிறார்கள்.  இதுதவிர சென்னையில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடபெயர்ச்சிக்கும் தயாராகி விட்டார்களாம். அதில் அண்ணாநகர் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, அடையாறு துணை கமிஷனர் செந்தில்குமார் என சிலரை வேறு இடத்துக்கு மாற்றவும் ஜார்ஜ் தரப்பில் முடிவு செய்துள்ளதாம். அந்த லிஸ்டில் வடசென்னை கூடுதல் கமிஷனர் சேஷசாயி, தலைமையக கூடுதல் கமிஷனர் அபயக்குமார் சிங்..ஆகியோரின் பெயர்கள் இருக்கிறதாம்.
அடுத்த சில நாட்களில் சென்னை போலீஸுல் 'உள்ளே - வெளியே' யார் யார் என்று தெரிந்துவிடும்.


 -  நமது நிருபர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ