Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணின் மீது 30 தடவை கத்திக்குத்து! அதிர வைக்கும் சிசிடிவி பதிவு! #WomanStabbed

எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்? தனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை தாக்கும் கொடூர மனப்பான்மை எப்படி வந்தது?

குற்றங்கள் நிகழ்த்துவோர் ஒருபுறம் இருக்கட்டும். அதே நேரத்தில் மனிதாபிமானம் அற்று வாழ்வதும் சமூகத்தின் அநீதியைக் கண்டு கொந்தளிக்காமல் இருக்கப் பழகும் ஓர் இனம் படிப்படியாக உருவாகிக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோமா?

சாலையில் ஒருவர் அடிப்பட்டுக் கிடந்தாலோ அல்லது கண்முன்னால் ஒருவர் கொலை செய்யப்பட்டு துடித்துக் கொண்டிருந்தாலோ அவரைக் காப்பாற்ற மனசு துடித்தாலும் இந்த நாட்டின் சட்டங்களுக்கும் காவல்துறைக்கும் பயந்து மனசாட்சியை மெதுவாய்ப் புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல முடிகிறது.

சுவாதி கொலை நடந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த சம்பவம் மக்களின் மனிதாபம் மண்னில் புதைந்தற்கான அடையாளமாய் நிற்கிறது. சாலையோரம்  நின்றுகொண்டிருந்த 21 வயது பெண் ஒருவரை, பைக்கில் வந்த ஒரு நபர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல... 30 தடவைகள். அந்தப் பெண்ணின் உயிர் போகிறவரைக்கும் குத்திக்கொண்டே இருந்தான். கத்திக் குத்தோடு நிற்காமல் கல்லை தூக்கி தலையில் போட்டிருக்கான், பிறகு காலால் உதைத்திருக்கிறான்.   சி.சி.டிவில் பதிவான இந்தக் காட்சி இப்போது வெளியாகியுள்ளது. பதிவான காட்சிகளை பார்க்கும்போது சம்பவம் நடந்த இடத்தில் பலர் வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்ததுதான் கொடுமையான விஷயம். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கருணா. டீச்சர் வேலை பார்க்கும் இவர், ஐந்து மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரான சுரேந்தரால் தொல்லைகள் வருவதாக போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் கருணா குடும்பத்தினர். அந்த நபர்தான் கருணாவை கொலை செய்திருப்பதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது..

இதேபோல கடந்த திங்கள் அன்று 32 வயது புது மணப் பெண்ணை, அவருடைய முன்னாள் காதலரால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தையும் அக்கம் பக்கத்தினர் வேடிக்கைதான் பார்த்துகொண்டிருந்தனர். இது நடந்து 24 மணி நேரம்கூட ஆகவில்லை. இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்திருப்பது டெல்லி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் இதையே தான் கேட்கத் தோன்றுகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!

- என்.மல்லிகார்ஜுனா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ