Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பை ஆர்டிஐ ஆர்வலர் சுட்டு கொலை

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் புபேந்திரா விரா,  கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபரால்  சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 


72 வயதான ஆர்டிஐ ஆர்வலர் விரா, மும்பையில் வக்கோலா என்னும் பகுதியில் வசித்து வந்தவர். கலினா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக அவர் லோக் ஆயுக்தா, மும்பை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு  கடிதங்கள் எழுதி உள்ளார். பலமுறை மிரட்டல்கள் வந்தும், அதற்கு அஞ்சாமல்  சட்டவிரோத கட்டிடங்கள் கட்டி வருபவர்கள், நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளார். 


இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், விராவை சராமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திலேயே விரா உயிரிழந்துள்ளார். விராவின் குடும்பத்தினர் விரா சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்து  அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். 


 வகோலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, பின்னர் விராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் புபேந்திரா விராவை சுட்டுக்கொன்ற மர்ம ஆசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ