Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைக்கு பாலூட்டக் கூடாது- மனைவிக்கு கட்டளையிட்ட கணவன்!

 

கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் மதரீதியான காரணங்களைக் கூறி, அபுபக்கர் என்பவர் குழந்தை பிறந்த சில மணி நேரங்களே ஆன தனது குழந்தைக்கு மனைவி தாய்ப்பால் தரக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

நேற்று, குழந்தை பிறந்தவுடன் தாய் ஹவ்சத்திடம் தாய்ப்பால் புகட்டுமாறு செவிலியர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அவர் வேதனையுடன் என் கணவர் குழந்தைக்கு பால் புகட்டக்கூடாது என்று கூறியிருக்கிறார். விசாரித்ததில், தனது கணவர் அபுபக்கர் 24 மணி நேரத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்றும் மசூதியிலிருந்து ஐந்து பிரார்த்தனை அழைப்புகள் வரும்வரையில் தாய்ப்பால் ஊட்டக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார். மேலும், குழந்தை இறந்துவிட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார் என்றார்.

இதுகுறித்து அபுபக்கர் ஹைட்ரோஸ் கோயா தங்கல் என்னும் மத குருவை பின்பற்றுவதாகவும், தனது முதல் குழந்தைக்கு இதை தான் பின்பற்றினேன். மெக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட நீரையும், தேனையும் கொடுத்தேன். குழந்தைக்கு எந்த அசம்பாவிதமும் நேரவில்லை எனவும் பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதுபற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. அங்கு வந்த போலீஸ் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் அபுபக்கர் தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன், வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து குழந்தையையும், மனைவியையும் டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் சென்றுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ