Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகை ஓவிய ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

 

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பாலமுருகன் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவருடைய பக்கத்து வீட்டில் குடியிருந்த தினேஷ்குமார் என்பவரின் மனைவியிடம் தகாத வார்த்தைகள் பேசி அவ்வப்போது பிரச்னைக்குள்ளாகி வந்திருக்கிறது. இந்நிலையில் தினேஷ்குமாரின் மனைவி குளிப்பதற்காக குளியலறைக்கு செல்வதற்கு முன்பே பாலமுருகன் குளியல் அறையில் தனது செல்போனை பொருத்தியிருக்கிறார். குளித்து முடித்த பிறகே தினேஷ்குமாரின் மனைவி அங்கு செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். 

இதனை அடுத்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் தினேஷ்குமாரும், அவரது மனைவியும். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து பாலமுருகனை போலீசார் கைது செய்து தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நீதிபதி கார்த்திகேயன் விசாரணை செய்து பாலமுருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close