Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை


சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூர், கோபால் செட்டித் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மனைவி துளசி. இவர்களுக்கு பிரித்தி, சரண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டிலிருந்து இன்று தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சங்கர்நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் பார்த்தபோது அழுகிய நிலையில் 4 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 - எஸ்.மகேஷ்
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

க்ரைம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close