Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்ட பெண்!


ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்  ஷார்பத் குலா. இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே தன் கண்களால் உலகத்தை கவர்ந்தவர். பச்சை நிற கண்களை உடையவர் இவர் என்பதால் அவரை படம் எடுத்து தனது அட்டைப் படத்தில் பிரசுரித்தது 'National Geographic' இதன் மூலமே உலக அளவில் பெரிதும் பிரபலமானார்.

தற்போது அவர் பாகிஸ்தானில் இருந்து வருகிறார். அவர் மீது போலியான ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்கு வந்து குடியேறியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு கடந்த மாதம் கைதும் செய்யப்பட்டார். 15 நாட்கள் சிறை தண்டணை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.

இதனை அடுத்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ஷார்பத் குலா நாடு கடத்தப்பட வேண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரை நாடு கடத்தும் முடிவை கைவிட்டது. மேலும். அவர் பாகிஸ்தானில் தொடர்ந்து வசிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தான் பாகிஸ்தானில் தங்க விரும்பவில்லை என்றும் தனது தாய் நாடான ஆப்கானிஸ்தானிற்கே தன்னை அனுப்பிவிடுமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படி ஷார்பத் குலானை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ