Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சில்லறைக்காக கொல்லப்பட்டாரா பிச்சைக்காரப் பெண்? நெல்லை கொடூரம்

நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு பெரும்  பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், நெல்லையில் பிச்சை எடுக்கும் பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில், சில்லறை காசுகள் திருடப்பட்ட பிரச்னையும் ஒரு காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படுவதால், அதை மாற்ற வழி தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி காணப்படுகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பாழடைந்த மண்டபத்தில், பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து கூடங்குளம் போலீஸார் விசாரணை நடத்தினர். சில்லறைக்காக அந்தப் பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் முதலில் விசாரித்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்தப் பெண், கூடங்குளம் அருகே உள்ள சவுந்திரலிங்கபுரம், இசக்கிஅம்மன் கோயில் தெருக்ச் சேர்ந்த சொர்ணா என்பது தெரியவந்தது. சொர்ணாவின் கணவர் அய்யாப்பழம் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து பிழைத்து வந்தார். சொர்ணாவின் அம்மா, முத்தம்மாள், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றாலும்,  அவர் அங்கு தங்குவதில்லை. இந்நிலையில் போலீஸார்,  கூடங்குளம் அருகே உள்ள சங்கு பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த பொன்பாண்டி என்ற வாலிபரிடம், சொர்ணா கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். பொன்பாண்டி மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அப்போது பொன்பாண்டி சொன்ன தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சில்லறை பிரச்னைக்காக சொர்ணாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்பாண்டியிடம் விசாரித்தோம். அப்போது பொன்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் அரிசந்திரன், ஆண்ட்ரூஸ், வேல்முருகன் ஆகியோர் சம்பவத்தன்று நன்றாக மது அருந்தியுள்ளனர். இதன்பிறகு ஊருக்கு வெளியே உள்ள மண்டபத்தில் படுத்திருந்த சொர்ணாவிடம் நான்கு பேரும் அத்துமீறியுள்ளனர். அப்போது, தன்னிடம் தவறாக நடந்த 4 பேர் குறித்த விவரத்தை ஊரில் சொல்லிவிடுவதாக சொர்ணா தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும், கல்லை தூக்கி சொர்ணாவின் தலையில் போட்டுள்ளனர். இதில் அவர், தலைநசுங்கி இறந்துள்ளார். அவர் இறந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. சொர்ணாவின் அம்மா முத்தம்மாள், மகளைத் தேடிய போது அவர் கொலை செய்யப்பட்ட விவரம் எங்களுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக பொன்பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கொலையில் சொர்ணாவிடமிருந்து சில்லறை காசுகளை அவர்கள் திருடியுள்ளார்களா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தன.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ