Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக லட்சக்கணக்கில் லஞ்சம்

குஜராத்தில் உள்ள துறைமுகக் கழக அதிகாரிகள் இரண்டு பேர் லஞ்சப்புகாரில் சிக்கியுள்ளனர். இவர்கள் 2.9 லட்சம் ரூபாய் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தனையும் புத்தம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக லஞ்சம் பெற்றிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இருவரும்  ஒரு தனியார் மின்சார நிறுவனத்தின் பில்களை செட்டில் செய்ய  மொத்தமாக 4.4 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளனர். தனியார் நிறுவனமோ லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்துவிட்டது. இருவருக்காக தரகர் ஒருவர் முதல்கட்ட தொகையாக 2.5 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெறும்போது கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ