Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிகிச்சை குளறுபடியால் உயிரிழந்த கல்லூரி மாணவி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து, அதன் பிறகு இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி, குன்னூரைச் சேர்ந்தவர் கவிதா. இவர் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் குன்னூர் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள மருத்துவர் முரளிதரனிடம் சிகிச்சைப் பெற்றார். சிகிச்சை பெற்ற கவிதாவுக்கு தோல் அரிப்பு, முடி கொட்டுதல், கண்பார்வை பாதிப்பு போன்ற பல பிரச்னைகளால் அவதிப்பட்டார். இதனால் கவிதாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இந்தப் புகாரை அடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குன்னூர் தாசில்தார் முன்னிலையில் டாக்டர் முரளிதரன் மற்றும் மருத்துவ சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மருத்துவச் செலவு தொகை ஏற்பதாக முரளிதரன் ஒப்புதல் அளித்திருந்தார். சிகிச்சையின் பிரச்னை ஒரு மாதத்துக்கும் மேல் நீடித்துக் கொண்டிருந்தது. நேற்று காலை திடீரென கவிதா உயிரிழந்தார். இதனை அடுத்து கவிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என போலீஸார் கூற, சுமார் இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் முரளிதரன் மருத்துவமனையும் மூடப்பட்டது.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

க்ரைம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close