Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீராவி முருகன் மீது குண்டர் சட்டம்..! தூத்துக்குடி முதல் சென்னை வரை கிரிமினல் சாம்ராஜ்யம்

                  கொள்ளையன்                                           

ழிப்பறி,பெண்களிடம் பாலியல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட நீராவி முருகன் மற்றும் அவனின் கூட்டாளி சக்திவேல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர் போலீசார்.

இந்த நீராவி முருகன்?  

தூத்துக்குடி முதல் சென்னை வரை பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் திருட்டு,வழிப்பறி அச்சத்தை ஏற்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்தான் நீராவி முருகன்.தூத்துக்குடி மாவட்டம் நீராவி என்ற ஊரைச் சேர்ந்தவன் என்பதால் முருகன் பெயரோடு நீராவியும் சேர்ந்துகொண்டது.தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின்பறிப்பு,பாலியல் முறைகேடுகள் செய்வது என்பதுதான் நீராவி முருகனின் கொடூர குற்றங்கள். தூத்துக்குடி தொடங்கி சென்னை வரை எல்லா மாவட்டத்திலும் நீராவி முருகன் தனது கூட்டாளியுடன் கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்தியவன் என்று திடுக்கிட வைக்கிறது போலீஸ் வட்டாரம்.
  
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம்,சென்னை துரைப்பாக்கத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை வேலம் என்பவரிடம் கத்தி முனையில் 14 சவரன் நகையைப் பறித்தான்.அந்த வழிப்பறி சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. பின்னர் அந்த அதிர்ச்சி வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்தது. அதனையடுத்து உஷாரான சென்னை போலீசார்,அந்த வீடியோவை ஆய்வு செய்து,நீராவி முருகனைக் கைது செய்தனர்.ஆனால் போலீசாருக்கு போக்குக்காட்டிவிட்டு நீராவி முருகன் தலைமறைவானான்.பின்னர் தமிழகம் முழுக்க நீராவி முருகனை கண்டால் உடனே தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டர்கள் போலீசாரால் ஒட்டப்பட்டது.

கொள்ளையன் நீராவி முருகனைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை 3 மாதமாகத் தேடியது.இறுதியில் சென்னை வளசரவாக்கத்திலும்,போரூரிலும் கொள்ளையில் ஈடுபட்ட வழக்குகளில் நீராவி முருகனும் கூட்டாளி சக்திவேலும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.அவர்களிடம் இருந்து 32 சவரன் தங்க நகைகள்,7 விலை உயர்ந்த மோட்டார் பைக்குகள்,2 கத்திகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரின்மீதும்,சென்னை,தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில்,நீராவி முருகன்,சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சென்னைப் பெருநகர கமிஷனர் கரன்சின்கா உத்தரவிட்டார்.இதனையடுத்து நேற்று(புதன்) குண்டர் சட்டத்தில் நீராவி முருகன்,சக்திவேல் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close